ETV Bharat / city

காலை 7 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 7 am - etvtamil

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச்சுருக்கம்...

காலை 7 மணி செய்திச்சுருக்கம்
காலை 7 மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Jul 13, 2021, 7:29 AM IST

1. 'மாநிலமாகிறது கொங்குநாடு?' - பாஜக தீர்மானம்

மேற்கு மண்டலத்தை கொங்குநாடு என்ற புதிய மாநிலமாக அறிவிக்க வேண்டும் என பாஜக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2. 'மேகதாதுவில் அணை கட்டுவதைத் தடுத்தே தீருவோம்' - துரைமுருகன் பதிலடி

'மேகதாதுவில் அணை கட்டுவதை சட்டப்படி தடுத்தே தீருவோம்' எனத் தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜா பொம்மைய்யாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

3. 'நீட் வேண்டாம் என்பதே அரசின் நிலைப்பாடு'

நீட் தேர்விற்கு தமிழ்நாடு மாணவர்கள் தயாராவதில் தவறு இல்லை என்றும், நீட் தேர்விலிருந்து விலக்குப் பெற வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு அரசின் உறுதியான நிலைப்பாடு என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

4. நீட் தேர்வு தேதி அறிவிப்பு

நாடு முழுவதும் செப்டம்பர் 12ஆம் தேதி மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.

5. மூன்றாம் அலை எச்சரிக்கை: அச்சத்தில் மக்கள்!

கரோனா தொற்று முதல் இரண்டு அலைகள், உலகத்தையே புரட்டிப்போட்டுள்ளது. இருப்பினும், மீண்டும் பொது இடங்களில் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால், மக்கள் மூன்றாம் அலை குறித்து பெரும் அச்சத்தில் உள்ளனர்.

6. ஒரேநாளில் குணமடைந்து வீடு திரும்பியோர் 3104 நபர்கள்

தமிழ்நாட்டில் ஜூலை 12ல் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,652 ஆக குறைந்துள்ளது.

7. தொலைக்காட்சி விவாதங்களில் அதிமுக பங்கேற்காது - இபிஎஸ், ஓபிஎஸ் கூட்டறிக்கை

ஊடக விவாதங்களில் இனி அதிமுக கழக நிர்வாகிகளோ, செய்தித் தொடர்பாளர்களோ, கழகத்தைச் சார்ந்தவர்களோ யாரும் இனி பங்கேற்கமாட்டார்கள் என கூட்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

8. கள்ளிக்காட்டு நாயகனுக்கு 68ஆவது அகவை தினம்

கவிஞர் வைரமுத்து இன்று (ஜூலை 13) தனது 68ஆவது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார்.

9. தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே!

சிவகார்த்திகேயன் தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதை, என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக எனப் பதிவு செய்திருந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10. யூரோ 2020: கோல்டன் பூட் விருதைத் தட்டிச்சென்ற ரொனால்டோ!

யூரோ 2020 கால்பந்து தொடரில் அதிக கோல்களை அடித்த வீரருக்கு கொடுக்கப்படும் கோல்டன் பூட் விருதை கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.