ETV Bharat / city

பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 3 PM

author img

By

Published : Aug 15, 2021, 3:01 PM IST

ஈடிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்...

பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்
பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்

1. 'தமிழ்நாட்டில் 3 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது' - மு.க. ஸ்டாலின்

நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டில் இதுவரை மூன்று கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

2. 75ஆவது ஆண்டு சுதந்திர தின நினைவுத் தூண் - முதலமைச்சர் திறந்து வைப்பு

நாட்டின் 75ஆவது ஆண்டு சுதந்திர தின நினைவுத் தூணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட். 15) திறந்து வைத்தார்.

3. காந்தியின் நினைவுகளை உலகறியச் செய்து வரும் மங்கம்மாள் மாளிகை!

இந்திய சுதந்திர வரலாற்றில் மாபெரும் சகாப்தம் மகாத்மா காந்தி என்றால், அவரது வாழ்க்கையின் முக்கியமான சகாப்தமாக இன்றுவரை இருந்து வருகிறது மதுரை. வாழும் போது, மோகன்தாஸ் கரம்சந்தை சாமானியன் காந்தியாக மாற்றிய அரை ஆடை சபதத்திற்கு விதை தூவிய மதுரைதான், காந்தியின் மறைவுக்கு அவரின் பெயரிலான நினைவு அருங்காட்சியகம் மூலம் வருடத்திற்கு 6 லட்சம் மக்களிடம் காந்தியின் தத்துவங்களைக் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறது.

4. 75ஆவது சுதந்திர தினம்: கோயம்புத்தூர் தியாகிகளின் வாரிசுகள் கருத்து!

நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படும் இந்நாளில் பெற்ற சுதந்திரத்தை பேணிக் காக்க வேண்டும். நாடு வளர்ச்சி பாதைக்குச் செல்ல சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர், சுதந்திர தியாகிகளின் வாரிசுகள்.

5. 'நிதிச்சுமையிலும் மக்களை காக்கத் தயங்கவில்லை' - மு.க.ஸ்டாலின்

75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதிச்சுமையிலும் தமிழ்நாட்டு மக்களை காக்க திமுக தயங்கவில்லை எனத் தெரிவித்தார்.

6. சுதந்திர தினம் - வங்கதேச எல்லையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வங்கதேச எல்லையில் இரு நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினரும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

7. ரூ.100 லட்சம் கோடி மதிப்பீட்டில் 'கதி சக்தி' திட்டம் - பிரதமர் மோடி

நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உள்கட்டமைப்பு, பொருளாதார மேம்பாட்டிற்காக ரூ.100 லட்சம் கோடி மதிப்பீட்டில் 'கதி சக்தி' திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

8. சிறு விவசாயிகளை வலுப்படுத்த வேண்டிய நேரமிது - பிரதமர் மோடி

வரும் காலங்களில் நாட்டின் சிறு விவசாயிகளை வலுப்படுத்த வேண்டிய திட்டங்கள் நிறைவேற்றப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

9. சுதந்திரப் போராட்ட வரலாற்றை காட்சிப்படுத்திய தமிழ் படங்கள்!

இன்று நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கலைகள் மூலம் சுதந்திர தாகம் விதைக்கப்பட்ட நாட்டில், சுதந்திரம் பெற்ற பிறகு, போராட்ட வரலாற்றின் சொல்லப்பட்ட, சொல்லப்படாத பல கதைகளும் கலைத்துறையான சினிமாவில் பதிவு செய்யப்பட்டன.

10. 75ஆவது சுதந்திர தின விழா: ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களை பாராட்டிய பிரதமர்!

நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற நம் விளையாட்டு வீரர்கள், எதிர்கால சந்ததியினருக்கு பெரும் ஊக்கமாகத் திகழ்வதாகத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.