ETV Bharat / city

விவசாயிகளை கூலிகளாக மாற்றவே புதிய வேளாண் சட்டம்

சென்னை: மத்திய அரசு கொண்டு வரும் விவசாய திருத்த சட்டம், உணவுப்பொருளை பதுக்கவும், செயற்கை தட்டுப்பாடுகளை ஏற்படுத்தி விலை உயர்வை அதிகரிக்கவே வழி வகுக்கும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது.

condemn
condemn
author img

By

Published : Sep 25, 2020, 1:30 PM IST

இது தொடர்பாக அதன் மாநில பொதுச்செயலாளர் முஹம்மது வெளியிட்டுள்ள அறிக்கையில், “ மோடி அரசு பொறுப்பேற்றது முதல் மக்களின் பிரச்சனைகளை பற்றி கவலைப்படாமல் கார்பரேட் நிறுவனங்களின் அரசாக செயல்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கான சட்டம் என்ற பெயரில் மசோதாவை நிறைவேற்றி விவசாயத்தை அழிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.

விவசாய பொருட்களை நேரடியாக தனியார் வாங்குவதன் மூலம் விவசாய பொருளுக்கான கூடுதல் விலை கிடைக்காமல் போகும். நாளடைவில் தனியார் கேட்கும் பொருளை பயிர் செய்யும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுவர். தனியாருக்கு விவசாய பொருள் விற்கப்படும் போது விவசாயிகளுக்காக அரசு செய்யும் இலவச மின்சாரம், மானியம், பயீர் காப்பீட்டு தொகை என அனைத்தும் ரத்தாகும். இந்த சட்டத்தில் அரிசி, கோதுமை, பருப்பு, எண்ணை உள்ளிட்ட பொருட்களை அத்தியாவசிய பட்டியலில் இருந்து நீக்கி உள்ளது மத்திய அரசு. இதனால் உணவுப்பொருளை ஒருவர் எவ்வளவு வேண்டுமானாலும் சேமித்து, செயற்கை தட்டுப்பாடுகளை ஏற்படுத்தி விலையை அதிகரிக்க செய்யலாம்.

கடந்த ஆறு ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கில் விவசாயிகள் தற்கொலை செய்த போதும், டெல்லியில் மாதக்கணக்கில் போராடிய போதும் விவசாயிகளை கண்டு கொள்ளாதது இந்த மோடி அரசு என்பதை யாரும் மறக்க முடியாது. எனவே, விவசாயிகளை கூலிகளாக மாற்றும் இந்த சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் “ என்று வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: அண்ணா பல்கலை. பெயர் மாற்றம் அநீதியானது - ராமதாஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.