ETV Bharat / city

'மகாராஷ்டிரா, கேரளாவிலிருந்து வந்தால் 14 நாள்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயம்' - maharashtra, kerala travellers news in Tamil

சென்னை: வெளிநாடுகள், வெளிமாநிலங்களான மகராஷ்டிரா, கேரளாவிலிருந்து வந்தால் 14 நாள்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயம் எனவும், அனைவருக்கும் 7 நாள்கள் கழித்து கட்டாயம் பரிசோதனை செய்யப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தமிழ்நாடு அரசு அறிவிப்பு
author img

By

Published : Feb 25, 2021, 11:45 AM IST

இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்கள் கரோனா வைரசின் (தீநுண்மி) தாக்கம் அதிகமாகக் காணப்படுகின்றது. புதிய வகை கரோனா தீநுண்மிகளான என்.440.கே., இ.484.கே. ஆகிய இரண்டும் மகாராஷ்டிராவில் கண்டறியப்பட்டுள்ளன.

இதேபோன்று கேரளாவிலும், தெலங்கானாவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனினும் அந்த இரண்டு மாநிலங்களிலும் கரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதற்கு, இவ்விரு புதிய வகை கரோனா தீநுண்மிகளே காரணம் என நம்புவதற்கில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அரசாணையில், “கரோனா பாதுகாப்பு புதிய வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுகின்றன. வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் கரோனா அறிகுறிகள் இருந்தால் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

வெளிமாநிலம், வெளிநாட்டிலிருந்து வந்தால் பரிசோதனை

வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்து சாலை வழியாகவோ, ரயில் மூலமோ, விமானம் மூலமாகவோ வரும் அனைத்துப் பயணிகளும் வெப்பப் பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும்.

அனைத்துப் பயணிகளும் கட்டாயம் 14 நாள்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். அப்போது அவருக்கு காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினைகள் இருக்கின்றனவா? என்பதை சுகாதாரத் துறை பணியாளர்கள் நேரில் ஆய்வுசெய்ய வேண்டும்.

மகாராஷ்டிரா, கேரளாவிலிருந்து வந்தால் தனிமைப்படுத்துதல் கட்டாயம்

மகாராஷ்டிரா, கேரளாவிலிருந்து வரும் பயணிகள் அனைவரையும் ஏழு நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்த வேண்டும். மேலும் ஏழு நாள்கள் அவர்களே காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் ஏற்படுகின்றனவா? என்பதைக் கண்காணிக்கவும், சுகாதாரப் பணியாளர்கள் அதனை மேற்பார்வை செய்ய வேண்டும்.

கரோனா தீநுண்மி தொற்று உறுதிசெய்யப்பட்டால் அவரை மருத்துவமனையிலோ அல்லது தனிமைப்படுத்தும் மையத்திலோ சேர்க்க வேண்டும். கரோனா பரிசோதனை செய்த பின்னர் அவருக்கு தீநுண்மி தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டாலும், அவர்களை 14 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் காெள்ள அறிவுறுத்த வேண்டும்.

தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தமிழ்நாடு அரசு அறிவிப்பு

வெளிநாடுகளான இங்கிலாந்து, பிரேசில், தென் ஆப்பிரிக்க, ஐரோப்பிய, மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வரும் சர்வதேசப் பயணிகள், தங்களது விவரங்களை மத்திய அரசின் சுகாதாரத் துறை இணையதளத்தில் பதிவுசெய்ய வேண்டும். அனைத்துப் பயணிகளும் தங்களுக்கு கரோனா தீநுண்மி தொற்று கண்டறிய ஆர்டி-பிசிஆர் பரிசோதனை 72 மணி நேரத்திற்கு முன்னர் செய்ததற்கான சான்றிதழைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். தவறான தகவலைப் பதிவுசெய்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்துப் பயணிகளையும் வெப்பப் பரிசோதனை மேற்கொள்வது கட்டாயமாகும். கரோனா தீநுண்மி தொற்று கண்டறியப்பட்டால் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கோ அல்லது தனிமைப்படுத்தும் மையத்திற்கோ அழைத்துச் செல்ல வேண்டும். வெளிநாட்டிலிருந்து வரும் அனைவரும் 14 நாள்கள் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...'சீட்டுக்காக யாரிடமும் யாசிக்க மாட்டேன்' நாஞ்சில் சம்பத்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.