இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“கரோனா தொற்றுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி தலைமைச் செயலக வளாகத்தில் பணியாளர்கள், பார்வையாளர்கள் அனைவரும் அவசியம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், தகுந்த இடைவெளியுடன் இருக்க வேண்டும், கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகள் போடப்பட்டுள்ளன.
இருப்பினும் பணியாளர்கள் இந்த விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதில்லை. இனி தலைமைச் செயலக பணியாளர்களும் பார்வையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், தகுந்த இடைவெளியுடன் இருக்க வேண்டும், அவ்வப்போது கைகளை கிருமி நாசினி கொண்டு கழுவ வேண்டும். தலைமைச் செயலக வளாகத்தில் எச்சில் துப்புவது கூடாது.
முகக்கவசம் அணியாமல் வரும் பணியாளர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் இனி 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தலைமைச் செயலக வளாகத்தில் எச்சில் துப்பும் நபர்களிடம் 500 ரூபாய் வசூலிக்கப்படும்” என எச்சரித்துள்ளது.