தமிழ்நாட்டில் வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகமாக காணப்படுகிறது. காலையில் பனி மூட்டம் தென்பட்டாலும் மதியம் வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து வருகிறது.
இதையடுத்து அடுத்த இரு நாள்களுக்கு தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் உயர்ந்து காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் மார்ச் 16 முதல் மார்ச் 19 வரை தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். மார்ச் 20ஆம் தேதி தென் தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சிறுத்தைகள் சண்டையால் குட்டி சிறுத்தை உயிரிழப்பு