ETV Bharat / city

ஆர்டிபிசிஆர் பரிசோதனைக் கட்டணம் குறைப்பு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு! - தமிழ்நாடு அரசு

சென்னை: கரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை செயவதற்கான கட்டணத்தைக் குறைத்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

ஆர்டிபிசிஆர் பரிசோதனை
RTPCR Test
author img

By

Published : May 20, 2021, 1:22 PM IST

இதுதொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அரசாணையில், கோவிட்-19 தொற்று உறுதிப்படுத்தும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை அரசு மற்றும் அரசால் பரிந்துரைக்கப்படும் மாதிரிகள் தனியார் ஆய்வுக் கூடங்களில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பரிசோதனை செய்தவற்கு கட்டணம் ரூ.800 இருந்து ரூ.550ஆகவும், குழு மாதிரிகளுக்கு ரூ.600இல் இருந்து 400 ரூபாயாகவும் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டப் பயனாளியாக இல்லாதவர்கள், தனியார் ஆய்வுக்கூடங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்தவற்கான கட்டணம் 1,200 ரூபாயில் இருந்து 900 ரூபாயாக நிர்ணயம் செய்யப்படுகிறது. வீட்டிற்குச் சென்று பரிசோதனை செய்வதற்கு கூடுதலான ரூ.300 கட்டணம் மாற்றமின்றி நிர்ணயம் செய்யப்படுகிறது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படாத தனியார் மருத்துவமனைகளில் பரிசோதிக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளுக்கான தொகையினை யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனம் மறுபரிசீலனை செய்தப் பின்னர் மீண்டும் வழங்கப்படும்' என அதில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.