ETV Bharat / city

10 சதவிகித பணியாளர்களுடன் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளுக்கு அனுமதி- தமிழ்நாடு அரசு

சென்னை: பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட, கட்டுப்பாட்டு பகுதியை தவிர (containment zone) மற்ற இடங்களில் 10 சதவிகித பணியாளர்களுடன் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு
author img

By

Published : Jul 9, 2020, 8:26 PM IST

தமிழ்நாடு அரசு, கரோனா நோய்த் தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனால் தமிழ்நாட்டில் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு விரும்புவோரின் சதவீதம் நாட்டிலேயே அதிகரித்து வருகிறது.

மேலும் நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு மிகக் குறைவாகவும் இருந்து வருகிறது. இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக தேசிய
பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், மத்திய அரசு, ஊரடங்கு உத்தரவை மார்ச் 25 ஆம் தேதி முதல் அமல்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது.

இதைத் தொடர்ந்து, கரோனா தொற்றின் நிலைமையைக் கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் ஜூலை 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே பல பணிகளுக்கு
அனுமதி அளித்து பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் இந்த ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.
தற்போது பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர (Except containment Zones), மற்ற பகுதிகளில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், அந்நிர்வாகமே ஏற்பாடு செய்யும் வாகனங்களில் சென்று, அதிகபட்சம் 10 சதவீத பணியாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது.

பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவதையும், வெளியிடங்களில் முககவசத்தை அணிந்து செல்வதையும், தகுந்த இடைவெளியை தவறாமல் கடைப்பிடித்து அவசிய தேவையில்லாமல் வெளியில் செல்வதைத்
தவிர்த்து, அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.