சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியால் திருப்பி அனுப்பப்பட்ட
இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அதிமுக, பாமக, பாஜக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றனர். அப்போது,
விவாதத்தைத் தவிர்த்து, திருப்பி அனுப்பப்பட்ட மசோதாவை மீண்டும் நிறைவேற்றுவதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களான நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், சி.சரஸ்வதி, எம்.ஆர் காந்தி ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.
நீட் தேர்வு விலக்கு மசோதாவை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி, 142 நாட்களுக்குப் பிறகு திருப்பி அனுப்பி, சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஒருமித்த மனதோடு நிறைவேற்றப்பட்ட மசோதாவை அவர் கையாண்ட விதம் பேசுபொருளாக உருவெடுத்துள்ளது.
இதுதொடர்பாக,
சட்டப்பேரவை கூட்டத்திற்கு, பிறகு எதிர்க் கட்சித் தலைவர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோர் செய்தியாளரிடம் பேசியதை
சட்ட ரீதியாக அணுகவும் -
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில்,"
சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் விஜயபாஸ்கரை முழுமையாகப் பேச அனுமதிக்கவில்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படியே நீட் தேர்வை நடத்த வேண்டிய சூழலில் அன்றைய அதிமுக அரசு இருந்தது. நீட் தேர்வு இன்றும் நடைபெறுகிறது. திமுக, காங்கிரஸ்கூட்டணி இருந்தபோது தான், நீட் தேர்வு எனும் வார்த்தையே அறிமுகமானது.
தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்யும் அனைத்து சட்ட நடவடிக்கைகளுக்கும் அதிமுக ஆதரவு அளிக்கும். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகச் செல்லும்போது சட்ட வல்லுநர்களின் ஆலோசனைக்குப் பிறகு சட்ட ரீதியாக இந்த பிரச்சனையை அணுக வேண்டும். சட்ட வல்லுநர்கள் மூலம் இதற்குத் தீர்வு காண வேண்டும். ஏனென்றால் இது உணர்வுப்பூர்வமான மாணவர்கள் சம்மந்தப்பட்ட பிரச்சனை" என்றார்.
'ஆளுநரின் கருத்துகள் சொத்தையானவை'
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர்
அரசுப் பள்ளி மாணவர்களின் நிலையைத் தெரியாமல் ஆளுநர் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். நீட் தேர்வுக்கு முன்பு அரசுப் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் மருத்துவப்
'இறையாண்மைக்கு
விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் சிந்தனை செல்வன் கூறுகையில், "தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதா ஐந்து மாத இடைவெளிக்குப் பிறகு ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடக் கூடியவர் அல்ல ஆளுநர்.
மாலைக்கண் பார்வையோடு உயர்மட்டக் குழு அறிக்கை
இது தமிழ்நாடு சட்டப்பேரவையின் இறையாண்மைக்கு எதிரானது. அரசியல் சாசனத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்
மருத்துவக்கல்வியைப் பொறுத்தவரை, இந்திய மருத்துவக்
மீண்டும் பாஜக நீங்கலாக அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்து இந்த தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளது. மாநில உரிமைகளைப் பாதுகாக்க திமுக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் விசிக உறுதுணையாக இருக்கும்" என்றார்.
'மசோதாவை உதாசினப்படுத்திய ஆளுநர்'
காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர்
சட்ட விதி 200-ன் படி, குடியரசுத் தலைவருக்கு மசோதாவை அனுப்பி இருக்க வேண்டும். ஆனால், இதனை மதிக்காமல் ஆளுநர் செயல்படுகிறார்.
அரசியல் அமைப்பின் மீது போர் தொடுக்க ஆளுநர் முயற்சி செய்கிறார்.
'ஆளுநரைத் திரும்பப்பெற வேண்டும்'
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் தளி ராமச்சந்திரன் கூறுகையில், "ஆளுநர் சொல்லும் காரணம் ஏற்றுக்கொள்வதாக இல்லை. மத்திய அரசு ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும். முதலமைச்சர் தலைமையில் அகில இந்தியக் கட்சித் தலைமைகள் நீட் தேர்வுக்கு எதிராக அணி திரட்ட வேண்டும்' என்றார்.
'ஆளுநரின் நடவடிக்கை நியாயமானதல்ல'
பாமக உறுப்பினர்
முதலமைச்சர் தலைமையில் குடியரசுத்தலைவர், பிரதமர்
இதையும் படிங்க: 'நீட் விவகாரத்தில் அரசு எடுக்கின்ற முயற்சிகளுக்கு அதிமுக ஆதரவு அளிக்கும்' - எடப்பாடி பழனிசாமி பேச்சு