சென்னை காயிதே மில்லத் மணிமண்டபம் அருகில் தமிழ்நாடு அரசு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
2006ஆம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த உதவி பேராசிரியர்களுக்கான பணி உயர்வை வழங்க வேண்டும் என்றும் பல்கலைக்கழக மானியக்குழு ஆணையின்படி உயர் படிப்புகளுக்கான ஊக்க பணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் வேண்டுகோளையும் வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த பல்கலைக்கழக ஆசிரியர் சங்க மாநில தலைவர் காந்திராசன், "எங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்" என்று தெரிவித்தார்.