இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோயம்புத்தூர், திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், தேனி திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும்.
ஆந்திராவை ஒட்டியுள்ள மேற்கு மத்திய வங்கக்கடல், கேரளாவை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் 40 கி.மீ., முதல் 50 கி.மீ., வேகம் வரை சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் இந்த பகுதிகளில் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸும் குறைந்தபட்சம் 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதேபோல், புதுச்சேரியின் ஒருசில பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.