ETV Bharat / city

முறைகேட்டில் ஈடுபட்டால் தேர்வு எழுத தடை - ஆசிரியர் தகுதி தேர்வு

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வின் போது முறைகேட்டில் ஈடுபட்டாலோ, தடை செய்யப்பட்ட பொருட்களை தேர்வு அறைக்குள் கொண்டு சென்றாலோ அடுத்துவரும் மூன்று தேர்வு எழுதத் தடை விதிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

aasiriyar
author img

By

Published : May 28, 2019, 2:36 PM IST

தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 8, 9ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வு ஒன்றினை ஜூன் எட்டாம் தேதி 470 மையங்களில் ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 341 பேர் எழுத உள்ளனர்.

அதேபோல் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இரண்டாம் தாளினை நான்கு லட்சத்து 20 ஆயிரத்து 815 பேர் 1,081 மையங்களில் ஜூன் 9ஆம் தேதி எழுத உள்ளனர். இவர்கள் தங்களுக்கு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதற்கு அளிக்கப்பட்டுள்ள ஹால் டிக்கெட்டில் தேர்வர்கள் கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள் அச்சிடப்பட்டுள்ளது. அதில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத உள்ள தேர்வர்கள் தங்களின் ஹால் டிக்கெட்டில் உள்ள விவரங்களை சரிபார்த்து கொள்ள வேண்டும். அதில் ஏதாவது மாற்றம் இருந்தால் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் நாளன்று தேர்வு மையத்திற்கு தேர்வர்கள் காலை 8.30 மணிக்குள் வருகை தர வேண்டும்.

தேர்வு மையத்திற்குள் காவல் துறையினர் தேர்வர்களை பரிசோதனை செய்த பின்னரே அனுமதிப்பர். காலை ஒன்பது முப்பது மணிக்கு மேல் எந்த தேர்வரும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வு மையத்திற்குள் செல்போன், பேஜர், டிஜிட்டல் டைரி உட்பட எந்த மின்னணு பொருட்களும் எடுத்துச் செல்லக்கூடாது. அதை மீறி தேர்வு மையத்திற்குள் எடுத்துச் சென்றால் அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்கு தகுதியற்றவர் என அறிவிக்கபடுவதுடன், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், அவர்கள் அடுத்துவரும் மூன்று தேர்வுகளை எழுதவும் வேறு தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டு தடை செய்யப்படுவார்கள்.
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத உள்ளவர்களுக்கு காலை ஒன்பது மணி 40 நிமிடங்களுக்குள் ஓஎம்ஆர் விடைத்தாள், வருகைப் பதிவேடு எடுக்கப்படும். காலை 10 மணிக்கு மேல் எக்காரணத்தைக் கொண்டும் தேர்வர்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இதேபோல் 10 மணி முதல் தேர்வு முடியும் வரை தேர்வர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் தேர்வு அறையில் இருந்து வெளியில் அனுப்பப்படமாட்டார்கள். தேர்வர்கள் நீலம் அல்லது கருப்பு நிற பால் பாயிண்ட் பெண்களை மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

ஓஎம்ஆர் விடைத்தாளில் கேள்வி தாள் புத்தகத்திலுள்ள விவரத்தினை சரியாக குறிக்காவிட்டால் அந்த விடைத்தாள் மதிப்பீடு செய்வதில் இருந்து நிராகரிக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Intro:ஆசிரியர் தகுதி தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டால் 3 தேர்வு எழுத தடை

Body:சென்னை,
ஆசிரியர் தகுதி தேர்வின் போது முறைகேட்டில் ஈடுபட்டாலோ , தடை செய்யப்பட்ட பொருட்களை தேர்வு அறைக்குள் கொண்டு சென்றாலோ அடுத்து வரும் 3 தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடியாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு ஜூன் 8 மற்றும் 9-ம் தேதி நடைபெறுகிறது.
ஆசிரியர் தகுதி தேர்வு ஒன்றினை ஜூன் எட்டாம் தேதி 470 மையங்களில் ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 341 பேர் எழுத உள்ளனர்.

அதேபோல் ஆசிரியர் தகுதித் தேர்விற்கான 2 ம் தாளினை 4 லட்சத்து 20 ஆயிரத்து 815 பேர் 1,081 மையங்களில் ஜூன் 9 ந் தேதி எழுத உள்ளனர்.
இவர்கள் தங்களுக்கு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதற்கு அளிக்கப்பட்டுள்ள ஹால் டிக்கெட்டில் தேர்வர்கள் கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள் அச்சிடப்பட்டுள்ளது. அதில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத உள்ள தேர்வர்கள் தங்களின் ஹால்டிக்கெட்டில் உள்ள விபரங்களை சரிபார்த்து கொள்ள வேண்டும். அதில் ஏதாவது மாற்றம் இருந்தால் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் நாளன்று தேர்வு மையத்திற்கு தேர்வர்கள் காலை எட்டு முப்பது மணிக்குள் வருகை தர வேண்டும். தேர்வு மையத்திற்குள் காவல்துறையினர் தேர்வர்களை பரிசோதனை செய்த பின்னரே அனுமதிப்பர். காலை ஒன்பது முப்பது மணிக்கு மேல் எந்த தேர்வரும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தேர்வு மையத்திற்குள் செல்போன் ,பேஜர்,
, டிஜிட்டல் டைரி உட்பட எந்த மின்னணு பொருட்களும் எடுத்துச் செல்லக்கூடாது. அதை மீறி தேர்வு மையத்திற்குள் எடுத்துச் சென்றால் அவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதற்கு தகுதியற்றவர் என அறிவிக்கபடுவதுடன், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் அவர்கள் அடுத்து வரும் மூன்று தேர்வுகளை எழுதவும் வேறு தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டு தடை செய்யப்படுவார்கள்.
ஆசிரியர் தகுதி தேர்வு எழுத உள்ளவர்களுக்கு காலை ஒன்பது மணி40 நிமிடத்திற்குள் ஓஎம்ஆர் விடைத்தாள் மற்றும் வருகைப் பதிவேடு எடுக்கப்படும்.
காலை 10 மணிக்கு மேல் எக்காரணத்தைக் கொண்டும் தேர்வர்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதேபோல் 10 மணி முதல் தேர்வு முடியும் வரை தேர்வர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் தேர்வு அறையில் இருந்து வெளியில் அனுப்ப மாட்டார்கள்.
தேர்வர்கள் நீலம் அல்லது கருப்பு நிற பால் பாயிண்ட் பெண்களை மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஓஎம்ஆர் விடைத்தாளில் கேள்வி தாள் புத்தகத்திலுள்ள விபரத்தினை சரியாக குறிக்காவிட்டால் அந்த விடைத்தாள் மதிப்பீடு செய்வதில் இருந்து நிராகரிக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.