ETV Bharat / city

விரிவுரையாளர் தேர்வு: வினாத்தாள் வெளியானதாக வதந்தி பரப்பியோர் மீது புகார் - சென்னை மாவட்ட செய்திகள்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் வினாத்தாள் வெளியானதாக சமூக வலைதளத்தில் தவறான தகவல்களைப் பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டிஜிபி அலுவலகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் புகார் செய்துள்ளது.

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு
author img

By

Published : Dec 11, 2021, 10:13 AM IST

சென்னை: பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு கணினி முறையில் நடைபெற்ற தேர்வின்போது நாமக்கல் ஞானமணி தொழில்நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய பெண் தேர்வர் ஒருவர் கணக்கீடுவதற்காக அளிக்கப்பட்ட வெள்ளைத்தாளை (rough sheet) பயன்படுத்தி கணினித் திரையில் தோன்றிய வினாக்களைப் பதிவுசெய்துள்ளார்.

மேலும் தேர்விற்கான விதிகளை மீறி தேர்வு முடிந்த பின்னர் வெளியில் வந்த அவர், தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாகச் சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார்.

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிர விசாரணை நடத்தியதில், தேர்வுக்கு முன் எந்தவிதமான வினாத்தாளும் வெளியாகவில்லை. கேள்வித்தாள் வெளியானதாகத் தவறான தகவல்கள் பரப்பியவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்றைய தினம் முடிவு செய்தது.

இதைத் தொடர்ந்து, கேள்வித்தாள் வெளியானதாகத் தகவலை வெளியிட்ட நாமக்கல்லைச் சேர்ந்த பூர்ணிமா தேவி என்ற தேர்வர் மீதும், சமூக வலைதளத்தில் தவறான தகவல்களைப் பரப்பியவர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் துறைத் தலைவர் அலுவலகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டிலும் தேர்வு மையத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளையும் தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில் விதிமுறைகளை மீறிய பூர்ணிமா தேவி மீது வாழ்நாள் தடைவிதிக்கவும், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஜெயலலிதாவின் வேதா இல்லம் தீபா, தீபக்கிடம் ஒப்படைப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.