ETV Bharat / city

உதயநிதியை அமைச்சராக்க திமுகவில் வலுக்கும் ஆதரவு - பின்னணி என்ன? - உதயநிதி

திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிகேணி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என திமுக அமைச்சர்கள் ஆதரவுக் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

உதயநிதியை அமைச்சராக்க திமுகவில் வலுக்கும் ஆதரவு

author img

By

Published : Dec 17, 2021, 6:03 PM IST

சென்னை: திமுக அரசு பொறுப்பேற்று 6 மாதங்கள் நிறைவடையப் போகிறது, நடுநிலையாளர்களின் விமர்சனமின்றி தொடர்ந்து ஆட்சி செய்து வரும் நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என திமுகவின் முக்கிய அமைச்சர்கள் குரல் கொடுக்கத் தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில் வரும் ஜனவரி 5ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழ்நாடு சட்டபேரவை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்பாக, தமிழ்நாடு அமைச்சரவையை விரிவாக்கம் செய்து, முக்கியப் பொறுப்பு வழங்க வேண்டும் என்பது சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதலமைச்சர் குடும்பத்தினரின் விருப்பமாக உள்ளது.

முக்கிய அமைச்சர்கள் ஆதரவு?

திமுகவில் உதயநிதி ஸ்டாலின் இளைஞரணிச் செயலாளராகப் பொறுப்பேற்றபின், முதலில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தவர், அவரது நீண்டகால நண்பரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ்.

தற்போது உதயநிதி அமைச்சராக வேண்டும் என்பது தமிழர்களின் நீண்டகால விருப்பம் என தனது கோரிக்கையை வெளிப்படையாகத் தெரிவித்தார்.

உதயநிதியை அமைச்சராக்க திமுகவில் வலுக்கும் ஆதரவு
உதயநிதியை அமைச்சராக்க திமுகவில் வலுக்கும் ஆதரவு

இது குறித்துப் பேசிய உழவர் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், 'உழைப்பவர்களுக்கு தகுதியான இடம் திமுகவில் உண்டு. கடந்த 6 மாத காலமாக திமுகவில் கடுமையாக உழைத்து வருகிறார், உதயநிதி.

மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்து வருகிறார். அவர் அமைச்சரானால் துறை வளர்ச்சி அடையும். மக்களுக்குத் தேவையான உதவிகள் சென்று சேரும்' எனத் தெரிவித்து உள்ளார்.

முதலமைச்சர் போலவே உதயநிதி செயல்படுகிறார் எனவும்; இரவு பகல் பாராது வெற்றிக்காக பாடுபட்டவர் என்றும்; விரைவில் அமைச்சராக தமிழ்நாடு முழுவதும் தனது பணியைத் தொடர வேண்டும் எனவும் தெரிவித்து உள்ளார்.

இது போல அமைச்சர் கே.என் நேரு, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆகிய பெரும்பாலான அமைச்சர்கள் வெளிப்படையாகவே தங்களது ஆதரவு கருத்தை உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாகத் தெரிவிக்க ஆரம்பித்து உள்ளனர்.

பொதுச்செயலாளர் துரைமுருகன் மவுனம் காப்பது ஏன்?

கடந்த சில நாட்களாகவே திமுக தலைவர் ஸ்டாலின் உடன் மூத்த அமைச்சர் துரைமுருகன் செல்வதைக் காண முடிவதில்லை. திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்ற போது வெளிப்படையாக, 'தம்பி வா... தலைமையேற்க வா... ' - என தனது ஆதரவினைத் தந்தவர், திமுகவில் உதயநிதி அமைச்சராக பெரும்பாலானோர் ஆதரவு தந்து உள்ள நிலையில் மூத்தத் தலைவரின் மவுனம் விவாதத்தை எழுப்பி உள்ளது.

கட்சியின் எந்த விவகாரம் குறித்தும் தற்போது எல்லாம் அவரிடம் கருத்து கேட்பதில்லை என வருத்தத்தில் உள்ளாராம். நாளைய தினம் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், இது குறித்து அனைவரும் தங்களது கருத்தைத் தெரிவிக்க உள்ளனர்.

இது குறித்துப் பேசிய அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, 'தேர்தல் அரசியலில் முன்னிலைப்படுத்தி திமுக அரசு பெரும்பான்மை இடங்களைப் பிடித்து ஆட்சிக்கு வந்துள்ளது.

ஆட்சிக்கு வந்த உடன் அமைச்சர் பதவி அளித்தால் தேவையற்ற விமர்சனங்களை உண்டாக்கும் என்பதினால், தற்போது உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்ற கோரிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும்' எனத் தெரிவித்தார்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள், யாருக்கு பிறக்கிறதோ இல்லையோ திமுக இளைஞரணிச் செயலாளருக்கு பிறக்கும் என அரசியல் விமர்சகர்கள் சூசகமாக கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: திமுக ஆட்சி 2024இல் முடிவுக்கு வரும்! - எடப்பாடி பழனிசாமி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.