தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழர்கள் அதிகம் வாழும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களில் தமிழ் இருக்கைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உலகில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழி வளர்ச்சிக்காக தமிழ் இருக்கையை ஏற்படுத்தும் திட்டத்தின் தொடர்ச்சியாக, அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்தப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை அமைக்க 7 கோடி ரூபாய் தேவைப்படும் நிலையில், சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி ஏற்கனவே அறிவித்ததன் அடிப்படையில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஒரு கோடி ரூபாயை ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருமா, சித்தார்த் உட்பட 600 பேர் மீது வழக்குப் பதிவு!