ETV Bharat / city

’தமிழ்நாட்டில் எங்கிருந்தாலும் ரேஷன் பொருள்கள் பெறலாம்’ - காமராஜ் - ரேஷன் பொருட்கள்

சென்னை: குடும்ப அட்டைதாரர்கள் தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் நியாய விலைக் கடை பொருள்களை பெற்றுக் கொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

kamaraj
kamaraj
author img

By

Published : Mar 19, 2020, 4:02 PM IST

’ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு’ திட்டம் வரும் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அதன் முன்னோட்டமாக தமிழ்நாட்டில் உள்ள எந்த நியாயவிலைக் கடையிலும் பொருள்கள் வாங்கிக் கொள்ளும் திட்டத்தை கடந்த ஜனவரி மாதம் அரசு அமல்படுத்தியது. அதன்படி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் சோதனை முறையில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார். பேரவையில் இன்று உணவு மற்றும் கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, மயிலாடுதுறை உறுப்பினர் ராதாகிருஷ்ணன் கேள்விக்கு பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், ”ஸ்மார்ட் ரேஷன் கார்டு வைத்துள்ள யாரும் தமிழ்நாட்டில் எந்த நியாயவிலைக் கடையிலும் அரிசி உள்ளிட்ட பொருள்களை வாங்கிக் கொள்ள முடியும். ஸ்மார்ட் கார்டு அல்லது ஆதார் கார்டு அல்லது பதிவு செய்த அலைபேசி எண் ஆகியவற்றுள் ஒன்றைப் பயன்படுத்தி பொருள்களைப் பெறலாம். மாநிலத்தில் தற்போது இரண்டு கோடியே ஐந்து லட்சம் நியாயவிலை அட்டைகள் உள்ள நிலையில், 35 ஆயிரத்து 233 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன“ என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: விவசாயிகளுக்கு பயிர்க்கடன் ரூ.11 ஆயிரம் கோடி வழங்க இலக்கு நிர்ணயம் - செல்லூர் ராஜு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.