கரோனா பாதிப்பு குறித்து தமிழ்நாடு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை வெளியிட்டுள்ளது, ”தமிழ்நாட்டில் புதிதாக 470 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கரோனாவால் பாதிப்படைந்தோர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 45 ஆயிரத்து 120 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டும் இன்று 140 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. பெரம்பலூர், அரியலூரில் இன்று கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை பூஜ்ஜியமாக உள்ளது.
மேலும் இன்று மட்டும் கரோனாவிலிருந்து 479 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை மொத்தம் 8 லட்சத்து 28 ஆயிரத்து 441 பேர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்றால் இன்று ஆறு பேர் உயிரிழந்ததன் மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்து 419ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 4 ஆயிரத்து 260 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் புதிதாக 53 ஆயிரத்து 483 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை ஒரு கோடியே 67 லட்சத்து 62 ஆயிரத்து 668 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
சென்னை - 233334
கோயம்புத்தூர் - 55152
செங்கல்பட்டு - 52095
திருவள்ளூர் - 43869
சேலம் - 32578
காஞ்சிபுரம் - 29379
கடலூர் - 25067
மதுரை - 21157
வேலூர் - 20878
திருவண்ணாமலை - 19426
தேனி - 17131
தஞ்சாவூர் - 17900
திருப்பூர் - 18140
விருதுநகர் - 16619
கன்னியாகுமரி - 16963
தூத்துக்குடி - 16315
ராணிப்பேட்டை - 16187
திருநெல்வேலி - 15667
விழுப்புரம் - 15230
திருச்சி - 14866
ஈரோடு - 14613
புதுக்கோட்டை - 11614
கள்ளக்குறிச்சி - 10899
திருவாரூர் - 11276
நாமக்கல் - 11733
திண்டுக்கல் - 11360
தென்காசி - 8491
நாகப்பட்டினம் - 8544
நீலகிரி - 8276
கிருஷ்ணகிரி - 8113
திருப்பத்தூர் - 7612
சிவகங்கை - 6710
ராமநாதபுரம் - 6433
தருமபுரி - 6626
கரூர் - 5465
அரியலூர் - 4710
பெரம்பலூர் - 2278