ETV Bharat / city

ஹூஸ்டன் தமிழ் இருக்கை - 1 கோடி ரூபாய் வழங்கினார் முதலமைச்சர்! - தமிழக அரசு

சென்னை: ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

fund
fund
author img

By

Published : Dec 23, 2019, 7:03 PM IST

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழர்கள் அதிகம் வாழும் வெளி மாநிலங்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய தமிழ்நாடு அரசு ஒரு கோடி ரூபாய் தருமென சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்திருந்ததன் அடிப்படையில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஒரு கோடி ரூபாயை ஒதுக்கி தமிழ்நாடு அண்மையில் அரசாணை வெளியிட்டது.

இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் இன்று ஹூஸ்டன் தமிழ் இருக்கை அமைப்பின் தலைவர் சாம் கண்ணப்பனிடம் அரசின் பங்குத் தொகையான ஒரு கோடி ரூபாயை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

ஹூஸ்டன் தமிழ் இருக்கை - 1 கோடி ரூபாய் வழங்கினார் முதல்வர்

இதேபோல், ஹூஸ்டன் பல்கலைக்கழகத்துக்கு நேரில் சென்று தமிழ் இருக்கைக்காக தனது சொந்த நிதியில் இருந்து 7 லட்சம் வழங்குவதாக அறிவித்த, துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வமும், சாம் கண்ணப்பனிடம் 7 லட்சத்துக்கான காசோலையை இன்று வழங்கினார்.

ஹூஸ்டன் தமிழ் இருக்கை - 7 லட்சம் ரூபாய் வழங்கினார் துணை முதல்வர்

இந்நிகழ்வின்போது, அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் , விஜிபி தமிழ் சங்க தலைவர் வி.ஜி. சந்தோசம், ராமகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழ்நாடு அரசால் ஒப்பளிப்பு செய்யப்படும் இத்தொகையானது, தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும் பொருளாதார திறனாற்றல் குறித்த ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், இருக்கை அமைப்பது தொடா்பான பணி முன்னேற்ற அறிக்கையை அரசுக்கு அனுப்ப வேண்டும் எனவும், ஒப்பளிப்பு செய்யப்படும் தொகைக்குரிய பயனீட்டுச் சான்றிதழை அந்தப் பல்கலைக்கழகத்திடமிருந்து பெற்று அரசுக்கு தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் அனுப்ப வேண்டும் என்றும், திட்டம் உரிய காலகட்டத்திற்குள் நிறைவேற்றப்பட வேண்டும், காலதாமதம் ஏற்பட்டால் பெறப்பட்ட நிதியுதவித் தொகை உரிய வட்டித் தொகையுடன் அரசுக்கு திரும்பச் செலுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் - கல்வியாளர்கள்

Intro:Body:ஹூஸ்டன் பல்கலைக்கு ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
அவருடன் தலைமை செயலாளர் சண்முகம், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

ஹார்வார்டு பல்கலையை தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலையில் தமிழ் இருக்கை அமைவதற்கு தமிழக அரசு சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழர்கள் அதிகம் வாழும் வெளி மாநிலங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களில் தமிழ் இருக்கைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை ஏற்படுத்தி தமிழ் வளர்க்கப்படும் என்ற திட்டத்தின் தொடர்ச்சியாக அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலையில் தமிழ் இருக்கை அமைய தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை அமைக்க 7 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. சட்டப்பேரவையில் தமிழக முதல்வரின் அறிவிப்பின் அடிப்படையில் ஹூஸ்டன் பல்கலையில் தமிழ் இருக்கை அமைய தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டது.

அமெரிக்காவில் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்துக்கு ரூ.1 கோடி பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு நிதி ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிடுவதாகவும், ஒப்பளிப்பு செய்யப்படும் தொகை தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும் பொருளாதார திறனாற்றல் குறித்த ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், இருக்கை அமைப்பது தொடா்பான பணி முன்னேற்ற அறிக்கையை அரசுக்கு அனுப்ப வேண்டும் எனவும், ஒப்பளிப்பு செய்யப்படும் தொகைக்குரிய பயனீட்டுச் சான்றிதழை அந்தப் பல்கலைக்கழகத்திடமிருந்து பெற்று அரசுக்கு தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் அனுப்ப வேண்டும் என்றும், திட்டம் உரிய காலகட்டத்துக்குள் நிறைவேற்றப்பட வேண்டும் , காலதாமதம் ஏற்பட்டால் பெறப்பட்ட நிதியுதவித்தொகை உரிய வட்டித் தொகையுடன் அரசுக்கு திரும்பச் செலுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், துணை முதலமைச்சர் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்ற போது தனது சொந்த நிதியில் இருந்து 7 லட்சம் ரூபாய் ஹூஸ்டன் பல்கலைக்கு வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.