ETV Bharat / city

கரோனா - தமிழ்நாடு முழுவதும் 184 ஆர்டிபிசிஆர் ஆய்வகங்கள்

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா வைரசை கண்டறிய ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பரிசோதனைகளை 24 மணி நேரத்தில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு செய்யும் வகையில் ஆய்வகங்களை அரசு உருவாக்கியுள்ளது.

test
test
author img

By

Published : Oct 3, 2020, 10:45 AM IST

Updated : Oct 8, 2020, 7:17 AM IST

கடந்த மார்ச் மாதம் 9 ஆம் தேதி ஓமனில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த 45 வயது நபர் ஒருவருக்குத்தான், முதன்முதலாக கரோனா தொற்று கண்டறியப்பட்டது. அவரது மாதிரிகள் கிண்டி கிங் ஆராய்ச்சி நிலையத்தில் முதலில் பரிசோதிக்கப்பட்டு, பின்னர் பூனே ஆராய்ச்சி நிலையத்திலிருந்து முடிவுகள் பெறப்பட்டன. அதே மார்ச் மாதம் 31 ஆம் தேதி, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் அனுமதியுடன், தமிழ்நாட்டில் 14 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டுக்கு வந்தன. பின்னர் மாதந்தோறும் ஆய்வகங்களின் எண்ணிக்கையை அரசு படிப்படியாக அதிகரித்தது.

ஆர்டிபிசிஆர் சோதனைகள் மட்டுமே நோய் தொற்றினை துல்லியமாக காண்பிக்கிறது

தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கரோனா தொற்றுக்காகவே 184 ஆர்டிபிசிஆர் (RT-PCR,Real Time-Polymerase Chain Reaction) ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன. அவற்றில் அரசு மருத்துவமனைகளில் 66, தனியார் மருத்துவமனைகளில் 118 ஆய்வகங்கள் செயல்படுகின்றன. செப்டம்பர் 28 ஆம் தேதி வரை 71 லட்சத்து 81 ஆயிரத்து 125 ஆர்டிபிசிஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இங்கு எந்த மருத்துவமனையிலும் ஆண்டிஜன் சோதனைகள் செய்யப்படுவதில்லை. ஏனெனில், இச்சோதனைகளில் தொற்று குறித்த முடிவுகள் சரிவர கிடைக்காததால், ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மட்டுமே செய்யப்படுகின்றன.

தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் பரிசோதனை முறைகள் குறித்து மருத்துவக்கல்வி இயக்குநர் டாக்டர்.நாராயண பாபு கூறும்போது, “ தமிழ்நாட்டில் அனைத்து மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் பரிசோதனை ஆய்வகங்களில் கரோனா வைரசை கண்டறிய, ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மட்டுமே மேற்கொள்கிறோம். ஒரே நாளில் 96 ஆயிரம் பேருக்கு சோதனை செய்யும் அளவிற்கு வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆர்டிபிசிஆர் சோதனைகள் மட்டுமே நோய் தொற்றினை துல்லியமாக காண்பிக்கிறது.

பொது முடக்கம் விலக்கி கொள்ளப்பட்ட பின்னர், கோயம்புத்தூர், தஞ்சாவூர், சேலம் போன்ற சில மாவட்டங்களில் நோயின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கிறது. பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான படுக்கை வசதி, மருந்துகள் போதுமான அளவில் உள்ளதால், எவ்வித பிரச்சனையும் இல்லை. இறப்பு விகிதமும் தற்போது குறைந்து வருகிறது. 1.6% ஆக உள்ள இறப்பை ஒரு விழுக்காட்டிற்கும் கீழே குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். தொற்று பாதித்து குணமானோர் எண்ணிக்கை 92% மேல் அதிகரித்துள்ளது. அரசின் அனைத்து மருத்துவ நிலையங்களிலு ஆர்டிபிசிஆர் சோதனைகள் செய்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன “ என்றார்.

184 ஆர்டிபிசிஆர் ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன

அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வர் வசந்தாமணி கூறும்போது, ” தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்படும் ஆர்டிபிசிஆர் சோதனைகள் உலகத்தரம் வாய்ந்ததாகும். அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் 66 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அதேவேளை இச்சோதனையில் நோய் தொற்று இருந்தாலும், 3 முதல் 5 விழுக்காட்டினருக்கு நெகட்டிவ் என முடிவு வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

அவ்வாறு நெகட்டிவ் என வந்தால் அலட்சியமாக இல்லாமல், அடுத்ததாக சிடி ஸ்கேன் தேவைப்பட்டால் மீண்டும் ஒருமுறை பரிசோதனை செய்ய வேண்டும். அதிலும் நெகட்டிவ் என்று வந்தால் ஏற்றுக் கொள்ளலாம். தொற்று சந்தேகத்துடன் இங்கு வரும் நோயாளிகளில் 70 முதல் 80 பேரில் 15 விழுக்காட்டினருக்கு சிடி ஸ்கேனில்தான் கரோனா தொற்று கண்டறியப்படுகிறது. கரோனா நோயாளிகளில் பலர் நுரையீரல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொற்றின் தாக்கத்திற்கு ஏற்ப அவர்களுக்கு அவசர சிகிச்சையும், பிற சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன “ என்று தெரிவித்தார்.

ஆர்டிபிசிஆர் சோதனைகள் உலகத்தரம் வாய்ந்ததாகும்

இதையும் படிங்க: கோவிஷூல்ட் தடுப்பூசி போட்டவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை!

Last Updated : Oct 8, 2020, 7:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.