ETV Bharat / city

'அனைத்துக் கட்சியினர் வாழ்த்து மகிழ்ச்சி அளிக்கிறது' - தமிழிசை பூரிப்பு!

சென்னை: ஆளுநர் பதவியேற்புக்கு அனைத்துக் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என எல்லோருடைய வாழ்த்துகளையும் பெற்றிருப்பது தமிழ்ப் பெண்ணாக மகிழ்ச்சி அளிப்பதாக தமிழிசை சௌந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.

tamilisai soundarajan
author img

By

Published : Sep 5, 2019, 5:17 PM IST

சென்னை திருவொற்றியூரில் உள்ள வடிவுடை அம்மன் கோயிலுக்கு இன்று தெலங்கானா ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழிசை சௌந்தரராஜன் வழிபாடு செய்ய வந்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை, ' தன் தந்தை குமரி அனந்தன் திருவொற்றியூர் எம்எல்ஏவாக இருந்த காலகட்டத்தில் இருந்து வடிவுடை அம்மன் கோயிலுக்கு வரும் பழக்கம் உள்ளது. தன் வாழ்க்கையில் ஒவ்வொரு முக்கியமான தருணத்திலும் திருவொற்றியூர் அம்மனின் ஆசையை வாங்கித்தான் சென்றிருப்பதாகவும்' தெரிவித்தார்.

தமிழிசை பேட்டி

மேலும், 'தெலங்கானா ஆளுநராக வரும் 8ஆம் தேதி பதவி ஏற்பதால், அதற்கான முழு அருள், ஆசியை வேண்டி இந்த கோயிலுக்கு வந்தேன். பதவியேற்பு விழாவில் எல்லா முக்கியமான தலைவர்களும் வருவர். ஆளுநர் பதவி கிடைத்ததற்கு அனைத்துக் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என எல்லோருடைய வாழ்த்துகளையும் பெற்றிருப்பது, ஒரு தமிழ்ப் பெண்ணாக மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக' தமிழிசை கூறினார்.

Intro:சென்னை திருவொற்றியூரில் உள்ள வடிவுடை அம்மன் கோவிலுக்கு வருகை தந்தார் தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்ட தமிழிசை சௌந்தர்ராஜன்

Body:சென்னை திருவெற்றியூர் தியாகராய சுவாமியை சிறு வயதில் இருந்தே இந்த கோயில் எனக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கிறது

இந்த கோவில் நான் மிகச் சிறு வயதிலிருந்தே என் தந்தை குமரி அனந்தன் அவர்கள் திருவொற்றியூர் எம்எல்ஏவாக இருந்த காலகட்டத்தில் இருந்து இந்த கோவிலுக்கு வரும் பழக்கம் எனக்கு உள்ளது அது மட்டுமில்லாமல் எனது வாழ்க்கையில் ஒவ்வொரு முக்கியமான தருணத்திலும் திருவொற்றியூர் அம்மனின் ஆசையை வாங்கித்தான் சென்றிருக்கிறேன்

இந்தக் கால கட்டத்தில் மரியாதைக்குரிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆளும் மரியாதை கூறி அமைச்சு அவர்களாலும் ஒரு மிகப்பெரிய பொறுப்பு எனக்கு தரப்பட்டது தெலுங்கானா ஆளுநராக வரும் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு பதவி ஏற்கிறேன் அதற்கான முழு அருளையும் ஆசியையும் வேண்டி அன்னை வடிவுடையம்மை தியாகராய சுவாமியிடம் அருளைப் பெறுவதற்காக வந்துள்ளேன்

பதவியேற்பு விழாவில் எல்லா முக்கியமான தலைவர்களும் வருகின்றனர் வருகின்ற அத்தனை பேரும் முக்கியமானவர்கள் முக்கியமான தலைவர்களும் கலந்து கொள்வார்கள்

அனைத்துக் கட்சித் தலைவர்கள் பொதுமக்கள் என எல்லோருடைய வாழ்த்துக்களையும் பெற்றிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது கட்சி எல்லையை கடந்து இந்த வாழ்த்துக்களை பெற்றிருப்பது ஒரு தமிழ் மகள் என்ற வகையில் தான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்

பதவியேற்பு விழாவில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் முதலமைச்சர் கட்சி தலைவர்கள் எல்லோரும் கலந்து கொள்வார்கள் என்று தெலுங்கானா ஆளுநராக பொறுப்பேற்க உள்ள தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

Conclusion:சென்னை திருவொற்றியூரில் உள்ள வடிவுடை அம்மன் கோவிலுக்கு வருகை தந்தார் தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்ட தமிழிசை சௌந்தர்ராஜன்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.