தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளதால் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர். ஒரே காவல் நிலையத்தில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்த காவல் துறையினர், ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் புகார் அளித்த காவலர்களை உடனடியாகத் தேர்தல் ஆணையம் பணியிட மாற்றம் செய்துவருகின்றனர்.
ஏற்கெனவே தென் மண்டல ஐஜி முருகன், கோவை ஆணையர் சுமித் சரண், 221 காவல் ஆய்வாளர்கள், 11 காவல் கூடுதல் துணைக் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக இன்று (மார்ச் 25) தமிழ்நாடு முழுவதும் 55 காவல் துணைக் கண்காணிப்பாளர்களைத் தேர்தல் ஆணையம் அளித்த உத்தரவின்பேரில் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதில் சென்னையில் மட்டும் 33 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருவொற்றியூர் காவல் துணைக் கண்காணிப்பாளராக இருந்த ஆனந்த குமார் திருவண்ணாமலை மத்திய குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளராகவும், வேப்பேரி காவல் துணைக் கண்காணிப்பாளராக இருந்த கமலக்கண்ணன் சேலம் தெற்கு குற்றப்பிரிவிலும், வில்லிவாக்கம் காவல் துணைக் கண்காணிப்பாளர்களை அகஸ்தின் பால் சுதாகர் காவல் துறை அகாதமியிலும், நுங்கம்பாக்கம் காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்துவேல் பாண்டி வேலூர் மனித உரிமை ஆணையத்தின் உதவி ஆணையராகவும் மாற்றப்பட்டு மொத்தம் 55 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கடந்த 12 நாள்களில் 135% அதிகரித்த கரோனா!