சென்னை: இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டு செய்திகுறிப்பில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேர்த்தில் 3,592 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.14,182 பேர் குணமடைந்துள்ளனர். 25 பேர் உயிரிழந்துள்ளனர். 66,992 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அதன்படி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 28 ஆயிரத்து 71ஆக அதிகரித்துள்ளது. அதேபோல குணமடைந்தோர் எண்ணிக்கை 33 லட்சத்து 23 ஆயிரத்து 214ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 862ஆகவும் அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 663 பேருக்கும், கோயம்புத்தூரில் 654 பேருக்கும், செங்கல்பட்டில் 290 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக கரோனா பாதிப்பு ஐந்தாயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. குறிப்பாக நேற்றும், இன்றும் தொற்று பாதிப்பு நான்காயிரத்திற்கும் கீழ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஐந்தாயிரமாக குறைந்த கரோனா பாதிப்பு