ETV Bharat / city

தினசரி கரோனா பாதிப்பு 33 ஆயிரத்தைத் தாண்டியது: சென்னையில் 3ஆவது நாளாகப் பாதிப்பு குறைவு

author img

By

Published : May 16, 2021, 8:58 PM IST

Updated : May 16, 2021, 10:31 PM IST

தினசரி கரோனா பாதிப்பு 33 ஆயிரத்தை தாண்டியது: சென்னையில் 3ஆவது நாளாக பாதிப்பு குறைவு

20:54 May 16

தமிழ்நாட்டில் புதிதாக 33 ஆயிரத்து 181 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கை
சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கை

தமிழ்நாட்டில் புதிதாக 33 ஆயிரத்து 181 பேருக்குக் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் கரோனாவால் 311 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 15 லட்சத்து 98 ஆயிரத்து  216ஆக அதிகரித்துள்ளது.  

கரோனாவிலிருந்து 21 ஆயிரத்து 317 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  தற்போது வரை 2 லட்சத்து 19ஆயிரத்து 342 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

சென்னையில் பாதிப்பு:

சென்னையில் தொடர்ந்து 3ஆவது நாளாகப் பாதிப்பு குறைந்துள்ளது.  சென்னையில் புதிதாக 6 ஆயிரத்து 247 பேருக்குக் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 25 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். கரோனாவால் இன்று மட்டும் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.

Last Updated : May 16, 2021, 10:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.