ETV Bharat / city

'பாட்ஷா' பாணியில் ரஜினியின் அரசியல் நுழைவு? - இந்திய தேர்தல் ஆணையம்

நடிகர் ரஜினிகாந்த் தொடங்க உள்ள புதிய கட்சியின் பெயர் 'மக்கள் சேவை கட்சி' எனவும், கட்சியின் சின்னமாக 'ஆட்டோ ரிக்‌ஷா' சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

"பாட்ஷா" பாணியில் அரசியல் பிரவேசத்தை தொடங்க உள்ளாரா நடிகர் ரஜினிகாந்த்?

author img

By

Published : Dec 15, 2020, 8:56 AM IST

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதற்கான தேதியை வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார். இந்நிலையில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஒரு கட்சியின் பெயரை மாற்றி 'மக்கள் சேவை கட்சி' எனத் தேர்தல் ஆணையத்தில் பதிவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

அதேபோல் நேற்றைய தினம் இந்தியத் தேர்தல் ஆணையம் சார்பாக அங்கீகாரம் இல்லாத அரசியல் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கிய இந்தியத் தேர்தல் ஆணையம், 'மக்கள் சேவை கட்சி'க்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னத்தை ஒதுக்கியுள்ளது.

பாட்ஷா பாணியில் அரசியல் பிரவேசத்தை தொடங்க உள்ளாரா நடிகர் ரஜினிகாந்த்?

நடிகர் ரஜினிகாந்த் 'பாபா முத்திரை' கேட்டதாகவும் அதைத் தேர்தல் ஆணையம் மறுத்ததால் அடுத்தபடியாக 'ஆட்டோ ரிக்‌ஷா' சின்னம் ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் தொடங்க உள்ள கட்சிக்கு ஆட்டோ, சைக்கிள், ரோஜா போன்ற சின்னங்கள் கேட்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் ஆட்டோ ஓட்டுநராக நடித்து வெளியான பாட்ஷா திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. அந்தப் படத்தைத் தொடர்ந்து ஆட்டோ என்றால் ரஜினிகாந்த் போன்ற பிம்பம் ஏற்பட்ட நிலையில் தற்போது அவர் தொடங்க உள்ள கட்சியின் சின்னமாக 'ஆட்டோ ரிக்‌ஷா' உள்ளது.

இதையும் படிங்க...சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.