நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தல், 27 மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. இத்தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களுக்கு, எந்தெந்தக் கட்சிகள் எத்தனை விழுக்காடு வாக்குகள் பெற்றுள்ளன என்பதை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதில், ( ஒன்றிய கவுன்சிலர் மட்டும் ) திமுக 40.94 விழுக்காடு, அதிமுக 34.60 விழுக்காடு, காங்கிரஸ் 2.57 விழுக்காடு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 1.22 விழுக்காடு, பாஜக 1.65 விழுக்காடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 0.65 விழுக்காடு, தேமுதிக 1.91 விழுக்காடு மற்றும் 15.52 விழுக்காடு வாக்குகளை மற்றக்கட்சிகள் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ஊராட்சி மன்றத் தலைவர் பதவி முடிவுகள் அறிவிக்கப்பட்டவை 97.88 விழுக்காடு மற்றும் அறிவிக்கப்படாதது 2.13 விழுக்காடு எனவும், கிராம ஊராட்சி மன்ற உறுப்பினர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது 85.85 விழுக்காடு, அறிவிக்கப்படாதது 14.02 விழுக்காடு எனவும் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அறிவிக்கப்படாமல் உள்ளமுடிவுகள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் இன்று மாலைக்குள் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி: மாநிலத் தேர்தல் ஆணையர்