ETV Bharat / city

வெட்டப்படும் மரங்கள்.... கலங்கும் சமூக ஆர்வலர்கள் - chennai district news

வெட்டப்படும் மரங்களை சார்ந்திருக்கக் கூடிய உயிரினங்கள் குறிப்பாக பறவைகளின் வாழ்விடங்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும்.

வளர்ச்சிகாக வெட்டப்படும் மரங்கள்
வளர்ச்சிகாக வெட்டப்படும் மரங்கள்
author img

By

Published : Jun 22, 2021, 11:20 PM IST

Updated : Jun 23, 2021, 8:49 AM IST

சென்னை: தமிழ்நாட்டில், எந்த ஒரு புதிய சாலை போக்குவரத்து திட்டம் அல்லது தொழில் திட்டம் தொடங்கப்படும்போதும் மரங்கள் அதற்கு இடையூறாக இருந்தால், உடனே அவைகளை அகற்றி அந்த திட்டங்களை நிறைவேற்றுவது வழக்கமாக உள்ளது.

மரங்களும் அதன் மரணங்களும்;

கடந்த ஆண்டுகளில் இயற்கை ஆர்வலர்கள் பல்வேறு திட்டங்களுக்கு மரங்கள் வெட்டப்படுவதை கடுமையாக எதிர்த்ததால், கடந்த ஓரிரு ஆண்டுகளில் சாலைப் பணிகள் நடைபெறும்போது மரங்களை வெட்டுவது சற்று குறைவாகவே இருந்தது.

எனினும், ஒரு சில திட்டங்களுக்காக மரங்களை வெட்டுவது தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆனால், அதற்குப் பதிலாக மரக்கன்றுகளை நடுவதை உரிய நிறுவனங்கள் செய்யத் தவறுகின்றன என குற்றம்சாட்டுகின்றனர்.

கடந்த காலங்களில் கோயம்பத்தூர், பொள்ளாச்சி, நீலகிரி, கன்னியாகுமரி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் சாலை விரிவாக்கப் பணிக்காக ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவைகளில் பெரும்பாலான மரங்கள் அனைத்தும் வயதானவை. இது இயற்கை ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

மேலும், அரசு அனைத்து மாவட்டங்களிலும் மரங்களை வளர்க்க லட்சக்கணக்கான மரக்கன்றுகளை ஊன்றினாலும், அதை முறையாகப் பராமரிக்க இயலவில்லை. உதாரணமாக, மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஆனால், அவைகளுக்கு தண்ணீர் ஊற்றி முறையாகப் பராமரிக்க முடியவில்லை. ஆனாலும், புதிய சாலை திட்டம் என்றால், அலுவலர்கள் எந்தெந்த மரங்களை அகற்ற வேண்டும் என வேகமாக கணக்கெடுக்க தொடங்குகிறார்கள் என்கின்றனர், ஆர்வலர்கள்.

வளர்ச்சிக்காக வெட்டப்படும் மரங்கள்

ஆர்வலர்களின் கோரிக்கைகள்;

இது குறித்து இயற்கை ஆர்வலர் கொ. அசோக சக்கரவர்த்தி நம்மிடம் கூறுகையில், "துறையூரிலிருந்து பெரம்பலூர் வரை 35 கி.மீ., கொண்ட சாலை விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில், சுமார் 50க்கும் மேற்பட்ட சாலையோரங்களில் அமைந்துள்ள பெரிய புளிய மரங்களை நெடுஞ்சாலைத் துறை வெட்டி சாய்த்துள்ளது.

பொதுவாக இது மாதிரியான மரங்களை வெட்டுவதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதனால் இந்த மரங்களை சார்ந்திருக்கக் கூடிய உயிரினங்கள், குறிப்பாக பறவைகளின் வாழ்விடங்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும்" எனக் கவலையடைந்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ''மரங்களை வெட்டுவது சுற்றுச்சூழலுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தல் மட்டுமல்லாமல், இது பூமியின் வெப்பநிலையை அதிகரிக்க வழி வகுக்கிறது. சாலை வளர்ச்சித் திட்டம் என்கிற பேரில் அரசு மரங்களை வெட்டுவது முற்றிலும் நியாயமல்ல. எனவே, வரும் காலங்களில் இது போன்ற சாலைத் திட்டத்தின்போது மரங்களை வெட்டாமல், எப்படி திட்டங்களை மாற்று முறையில் நிறைவேற்றுவது என்பது குறித்து முறையான திட்டமிடுதல் வேண்டும்' எனக் கூறினார்.

இதே போல பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுற்றுச்சூழல் ஆர்வலர் வெற்றிச்செல்வன் கூறுகையில் "எந்த ஒரு வளர்ச்சி திட்டமாக இருந்தாலும், அதற்காக மரங்கள் வெட்டப்படுவது என்பது தொடர்ச்சியாக நடந்து கொண்டு இருக்கிறது.

இது குறித்தான பிரச்னை உச்ச நீதிமன்றம் முன்பாக வந்த போது, நீதிமன்றம் ஒரு தீர்ப்பினை வழங்கியது. அதாவது எந்த திட்டத்திற்கு மரங்கள் வெட்டப்படும் போது, அதற்குப் பதிலாக நான்கு மடங்கு மரங்கள் நடப்பட வேண்டும். பிறகு, ஒன்றிய அரசானது 'காடு வளர்ப்புத் திட்டம்' என்ற ஒரு சட்டத்தினைக் கொண்டு வந்தது.

இந்த சட்டமானதும் சாலை மற்றும் தொழிற்சாலைகளுக்காக மரங்கள் வெட்டப்படும்போது, உரிய நிறுவனங்கள் நான்கு மடங்கு மரங்களை தனி நிலத்தில் நடுவது மட்டுமல்லாமல், இதனை பராமரிப்பதற்கான நிதிகளை ஒதுக்கி காடுகளை வளர்க்க வேண்டும் என்பதுதான் இந்தச் சட்டத்தின் நோக்கம். ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள் இதனை கண்டுகொள்ளவில்லை'' என்றார்.

அரசு அலுவலர்களின் வேலை;

இது குறித்து மாநில நெடுஞ்சாலை உயர் அலுவலர்கள் கூறுகையில், "புதிய சாலை திட்டமாக இருந்தாலும் சரி, சாலை விரிவாக்கப் பணியாக இருந்தாலும் சரி, முதலில் மரங்களை வெட்டாமல் எவ்வாறு திட்டத்தை நிறைவேற்றுவது என்பதுதான் நெடுஞ்சாலைத் துறையின் முக்கிய நோக்கம்.

மேலும், ஒரு சில மரங்களை அகற்றுவதாக இருந்தால் அதற்குரிய அனுமதியை சுற்றுச்சூழல் துறையிடம் சான்றிதழ் பெறுவது வழக்கம். மேலும், ஒரு மரத்தை வெட்டினால் நான்கு மரக்கன்றுகளை கட்டாயம் நடுவோம்" என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க: வெற்றியோ... தோல்வியோ... சிறு சிரிப்பில் கடப்பவர்!

Last Updated : Jun 23, 2021, 8:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.