ETV Bharat / city

'கர்ணன்' தலைப்பு தனுஷ் படத்திற்கு ஏற்றதல்லை - சிவாஜி சமூக நலப்பேரவை

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'கர்ணன்' படத் தலைப்புக்கு சிவாஜி சமூக நலப்பேரவையினர் எதிர்ப்பு கடிதம் அனுப்பி உள்ளனர்.

karnan-starring-dhanush
karnan-starring-dhanush
author img

By

Published : Dec 13, 2020, 12:13 PM IST

இது குறித்து அப்பேரவையின் தலைவர் சந்திரசேகரன் தனுஷிற்கு அனுப்பிய கடிதத்தில், "தாங்கள் 'கர்ணன்' என்னும் தலைப்பிலான திரைப்படத்தில் நடித்துள்ளதாக அறிகிறோம்.

நடிகர் திலகம் சிவாஜியின் லட்சோபலட்ச ரசிகர்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் 'கர்ணன்' என்றாலே நினைவில் நிற்பது நடிகர் திலகத்தின் 'கர்ணன்' திரைப்படம் மட்டும்தான்.

ஒரு திரைப்படத்தின் பெயரை மீண்டும் பயன்படுத்த சட்டப்படி இடமிருந்தாலும், நியாயப்படி, மனசாட்சிப்படி சில திரைப்படங்களின் பெயர்கள் மீண்டும் பயன்படுத்தாமல் தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில், அந்தப் பெயர்களே திரைப்படத்தின் கதைக்களத்தைத் தாங்கி கால காலத்திற்கும் நிலைத்து நிற்கக்கூடியதாக உள்ளது.

அந்தவகையில், தாங்களின் 'திருவிளையாடல்' திரைப்படத்திற்கும், எதிர்ப்புத் தெரிவித்தோம். அதன்பின் 'திருவிளையாடல் ஆரம்பம்' என அப்படம் பெயர் மாற்றம் செய்யப்பட்டு வெளிவந்தது.

அதையடுத்து வெளிவந்த 'உத்தமபுத்திரன்' திரைப்படத்திற்கு நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல், ஆண்டவன் கட்டளை, ராஜா, பச்சை விளக்கு என்று நடிகர் திலகம் நடித்த படங்களின் பெயரிலேயே மீண்டும் பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.

அதுபோன்ற சமூகப்படங்களின் பெயர்களை மீண்டும் பயன்படுத்த எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கப்போவதில்லை. ஆனால், சரஸ்வதி சபதம், திருவிளையாடல், கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற குறிப்பிட்ட தலைப்புகள் மீண்டும் பயன்படுத்தப்படக் கூடாது. ஏனெனில் அந்தத் திரைப்படங்களின் தலைப்புகளின் தனித்துவம் அப்படி.

கடிதம்
கடிதம்
'கர்ணன்' என்றாலே கொடுப்பவன், கொடைவள்ளல். ஆனால், தாங்கள் நடிக்கும் திரைப்படத்தின் கதையோ உரிமைக்காகப் போராடும் ஒருவருடைய கதை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மகாபாரதக் கதையையே மீண்டும் உருவாக்குகிறோம், அதில் 'கர்ணன்' கதாபாத்திரம் வருவதால் இந்தப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது என்றால் பரவாயில்லை.
ஒரு சமூகத் திரைப்படத்திற்கு 'கர்ணன்' என்று பெயரிட்டு தாங்கள் நடிப்பது ஏற்கத்தக்கதல்ல. இது லட்சோபலட்ச நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, மகாபாரதத்தை நேசிக்கும் கோடிக்கணக்கானவர்களின் மனத்தையும் புண்படுத்தக்கூடியதாக அமையும். எனவே, 'கர்ணன்' என்ற தலைப்பினை மாற்றி அமைத்திடவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தனுஷின் 'கர்ணன்' படப்பிடிப்பு நிறைவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.