இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், "கரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக ரேஷன் கடைகளில் ஏற்படும் கூட்டத்தைத் தவிர்க்க அனைவருக்கும் டோக்கன் முறையில் ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி ரேஷன் அட்டைதாரர்களுக்களின் வீடுகளுக்குச் சென்று டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் செப்டம்பர் மாதம் வழங்க வேண்டிய ரேஷன் பொருள்களுக்கான டோக்கன்கள் இன்று (ஆக.29) முதல் விநியோகம் செய்யப்படும். இந்த டோக்கன்கள் 30, 31, செப்டம்பர் 1ஆம் தேதி வரை வழங்கப்படும்.
அதைத்தொடர்ந்து ரேஷன் பொருள்கள் செப்டம்பர் 3ஆம் தேதியிலிருந்து வழங்கப்படும். டோக்கன்களில் குறிப்பிட்டுள்ள காலத்தில்தான் ரேஷன் அட்டைதாரர்கள் பொருள்களை வாங்க வரவேண்டும். குறிப்பாக ஒரு அட்டைக்கு ஒருவர் தான் வரவேண்டும்" எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மாநில எல்லைகளில் தொடரும் ரேசன் அரிசி கடத்தல் - மூவர் கைது!