ETV Bharat / city

தமிழ்நாட்டில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்

Live update
தமிழ்நாடு முழுவதும் 80 வயதுக்கும் மேற்பட்டோர் சுமார் 13 லட்சம் பேர் - சத்ய பிரதா சாகு
author img

By

Published : Mar 2, 2021, 12:23 PM IST

Updated : Mar 3, 2021, 12:07 PM IST

22:55 March 02

பாஜக தலைவர்கள் சென்னை வருகை!

தமிழ்நாடு முழுவதும் 80 வயதுக்கும் மேற்பட்டோர் சுமார் 13 லட்சம் பேர் - சத்ய பிரதா சாகு
அமித் ஷா - ஜே.பி.நட்டா
  • மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் மார்ச் 7 அன்று சென்னை வருகிறார்.
  • அவரைத் தொடர்ந்து, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வரும்  மார்ச் 10ஆம் தேதி பரப்புரை செய்ய சென்னை வரும் நிலையில் அதிமுகவுடனான தொகுதிப் பங்கீடு நிறைவுற்று வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

19:13 March 02

கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை - கே.எஸ்.அழகிரி

seating allocation in election
கே.எஸ்.அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது...

  • சுமார் 1 மணி நேரப் பேச்சுவார்த்தைக்குப்பின் சந்திப்பு நிறைவு பெற்றது.
  • பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெறும்.
  • கிட்டத்தட்ட பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. நாளை(மார்ச் 03) அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்தத்திட்டமில்லை. மேலிடப் பொறுப்பாளர்கள் வரும் திட்டமும் இல்லை.
  • ஓரிரு தினங்களில் தொகுதி பங்கீடு நிறைவடையும். காங்கிரஸ் கட்சியின் பலம் குறையவில்லை.
  • கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டியிட்டு 9 தொகுதியில் வெற்றிபெற்றோம்.
  • எங்களுக்கு தேவையான தொகுதிகளை உம்மன் சாண்டி வருகையின் போதே கேட்டுள்ளோம், இன்றைய பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது.

19:05 March 02

திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல - ஆர்.எஸ்.பாரதி

seating allocation in election
ஆர்.எஸ்.பாரதி

அறுபடை வீடுகளில் 5 வீடுகளில் திமுக தான் வெற்றி பெற்றுள்ளது. திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல என்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது என்று திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

18:10 March 02

இரண்டு நாட்களில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நிறைவுபெறும் - கே.என்.நேரு

கே.என்.நேரு

திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் பேசும்போது...

  • வரும் 7ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார். அடுத்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எப்படி முன்னேற்றத்தைக் கொண்டு வருவது என்பது குறித்து அவர் அறிவிப்பார்.
  • எந்தெந்த துறை வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என ஸ்டாலின் அறிவிப்பு வெளியிடுவார். இதில் சுமார் 2 லட்சம் பேர் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை சுமுகமாக தான் நடந்தது. அவர்கள் எங்களிடம் அதிருப்தி எதுவும் தெரிவிக்கவில்லை.
  • கூட்டணிக் கட்சிகள் நிறைய உள்ளன. அதனால் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய தாமதம் ஏற்படுகிறது.
  • இரண்டு நாட்களில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நிறைவுபெறும்.

17:40 March 02

ஆளும் அதிமுக அரசுக்கு எதிராக திமுக, டிராஃபிக் ராமசாமி வழக்கு!

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
  • அரசு செலவில் வெளியிடப்பட்டுள்ள 'வெற்றி நடைபோடும் தமிழகமே' விளம்பரத்துக்கு தடை விதிக்கக்கோரி திமுக சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
  • அதுமட்டுமின்றி, விளம்பரத் தொகையை அதிமுக கட்சியிடம் வசூலிக்கக்கோரி டிராஃபிக் ராமசாமியும் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
  • தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வன்முறையைத் தவிர்க்க வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

15:49 March 02

அதிமுகவினருடன் பேச பாமக தலைவர்கள் வருகை

  • பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், தொகுதிகள் இறுதி செய்ய அதிமுகவுடன் பேச பாமக தலைவர்கள் சென்னை தனியார் ஹோட்டலுக்கு வந்துள்ளனர்.
  • முன்னதாக அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

14:18 March 02

தமிழ்நாடு முழுவதும் 12 லட்சத்து 91 ஆயிரத்து 132 பேர் 80 வயதுக்கு மேற்பட்டோர் உள்ளனர் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார். 

அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 718  பேர் இடம் பெற்றுள்ளனர்.  குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 8 ஆயிரத்து 253 பேர் இடம்பெற்றுள்ளனர். 

14:09 March 02

திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை கேட்டுள்ளோம் - கே.பாலகிருஷ்ணன்

கடந்த ஆண்டுகளில் கேட்டதைவிட திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை கோரியுள்ளோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

13:43 March 02

அதிமுக உட்பட எந்த கட்சியாக இருந்தாலும் எங்கள் கட்சியின்கீழ்தான் கூட்டணி - டிடிவி தினகரன்

அதிமுக உட்பட எந்த கட்சியாக இருந்தாலும் எங்கள் கட்சியின்கீழ்தான் கூட்டணி என அம்மா மக்கள் முன்னேற்றக்கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உறுதிபடத் தெரிவித்துள்ளார். 

13:20 March 02

திமுக - காங்கிரஸ் இன்று 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை

சென்னையில் இன்று மாலையே திமுகவுடன் தொகுதிப் பங்கீட்டுப்பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் ஈடுபடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

13:02 March 02

திமுக அதிக தொகுதிகளில் போட்டியிட நினைப்பது நியாயம்தான் - வைகோ

திமுக அதிக தொகுதிகளில் போட்டியிட நினைப்பது நியாயம்தான் என வைகோ தெரிவித்துள்ளார். மேலும் மதிமுக தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும் என்றும் வைகோ உறுதிபடக் கூறியுள்ளார். 

முன்னதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் அக்கா மறைவு குறித்து திமுகவின் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் நேரில் சந்தித்து துக்கம் விசாரித்தபோது, கூட்டணி குறித்த  உரையாடலும் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது. அதனை உறுதிசெய்யும் வகையில் செய்தியாளர் சந்திப்பில் தொகுதிப்பங்கீடு குறித்து வைகோ பேசியுள்ளார்.

12:58 March 02

அதிமுக - அமமுக இணைப்பு சாத்தியமா?

சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன் அதிமுக - அமமுக இணைப்பு சாத்தியமா என்ற கேள்விக்கு அமமுக தலைமையில் கூட்டணி அமையும் எனத் தெரிவித்தார். திமுகவை ஒழித்து ஆட்சி அமைப்பதே ஒரே நோக்கம் எனவும் கூறினார்.

அமமுக - அதிமுக இணைப்பு குறித்த யூகங்களுக்குப் பதிலளிக்க முடியாது; விரைவில் கூட்டணி குறித்த முடிவு ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்படும் எனவும் கூறினார். 

12:56 March 02

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமல்ஹாசன்

தடுப்பூசி போட்டுக்கொள்ளும் கமல்ஹாசன்
தடுப்பூசி போட்டுக்கொள்ளும் கமல்ஹாசன்

தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.

12:46 March 02

மநீம கட்சியில் விருப்பமனு கொடுத்தவர்களிடையே 2ஆம் நாளாக நேர்காணல்

மக்கள் நீதி மய்யம் கட்சியில் திருச்சி மற்றும் நெல்லை மண்டலத்துக்கு  உட்பட்ட நிர்வாகிகளின் விருப்ப மனுக்கள் இன்று பரிசீலிக்கப்பட்டு, அவர்களிடம் இரண்டாவது நாளாக நேர்காணல் செய்யப்பட்டு வருகிறது.  

12:37 March 02

நாளை மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுடன் பேச்சுவார்த்தை

திமுக - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே நடைபெற்ற முதல்கட்ட பேச்சுவார்த்தை இன்று நிறைவுபெற்ற நிலையில், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை மீண்டும் நாளை தொடரும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி சுப்பராயன் தெரிவித்தார்.  

12:27 March 02

திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்?

திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடையே நடைபெற்ற தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை எனத்தெரிகிறது. இதையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்களது அலுவலகத்தில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 

திமுக தரப்பில் மிகக்குறைவான தொகுதிகள் கொடுக்க முன்வந்ததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

12:23 March 02

அதிமுக - தேமுதிக இடையே மீண்டும் பேச்சுவார்த்தை

இழுபறியில் இருந்து வரும் அதிமுக தேமுதிக இடையேயான தொகுதி பங்கீடுத் தொடர்பாக இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

12:08 March 02

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் எத்தனை தொகுதிகளை ஒதுக்குவது என்பது தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

இதில், திமுக தொகுதி பங்கீட்டு குழுத்தலைவர் கே.என்.நேரு உள்ளிட்ட திமுக தரப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலத் தலைவர் கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன், சவுந்தர்ராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் திமுகவுக்கும் இடையே தொகுதிப்பங்கீடு உடன்பாடு எட்டப்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Last Updated : Mar 3, 2021, 12:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.