ETV Bharat / city

சசிகலா வருகை! தூக்கம் தொலைத்த அதிமுக தலைமை!

சென்னை: பெங்களூருவில் அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் வந்த சசிகலாவால் தூக்கம் தொலைத்து நிற்கிறது அதிமுக தலைமை. இந்நிலையில், அடுத்த வாரம் தமிழகம் வரவுள்ள சசிகலா அதிமுக தலைமை நிலையம் செல்வாரா? அவரை கட்சியின் மூத்த நிர்வாகிகள் சென்று சந்திப்பார்களா, சசிகலாவின் அடுத்தக்கட்ட நகர்வுகள் என்ன என்பது குறித்து அலசுகிறது இத்தொகுப்பு.

return
return
author img

By

Published : Feb 4, 2021, 8:32 PM IST

சசிகலாவை எதிர்த்து ஜெயலலிதா சமாதியில் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்திய நாளான பிப்ரவரி 7 ஆம் தேதி, தனது நான்காண்டு சிறைவாசம் முடிந்து சசிகலா தமிழகம் வரவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஒரு நாள் தள்ளி 8 ஆம் தேதி அவர் வரவிருப்பதாக, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் இன்று தெரிவித்துள்ளார். அன்றைய தினம் காலை 9 மணிக்கு தமிழக எல்லையான ஓசூர் வரும் அவருக்கு, சென்னை வரை வழிநெடுகிலும் மேளதாளம் முழங்க, மலர் தூவி பிரமாண்ட வரவேற்பு அளிக்க அவரது தொண்டர்கள் திட்டமிட்டுள்ளனர். அதோடு, ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ அனுமதி கேட்டு, வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு அமமுக அமைப்புச் செயலாளர் ஜெயந்தி பத்மநாபன் கோரிக்கை மனுவையும் அளித்துள்ளார்.

சென்னை வரும் சசிகலா நேரடியாக ஜெயலலிதா சமாதிக்கு சென்று மரியாதை செலுத்த திட்டமிட்டதாக மதுரையில் நேற்று தினகரன் தெரிவித்திருந்தார். இதனை அறிந்த அரசு அவசர அவசரமாக நினைவிடத்தை மூடியுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால், அருங்காட்சியகம் மற்றும் பூங்கா அமைக்கும் இறுதிக்கட்ட பணிகளுக்காக நினைவிடம் மூடப்படுவதாக பொதுப்பணித்துறை சார்பில் அங்கு பதாகை வைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், பொதுப்பணித்துறையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வைத்திருப்பது இங்கு நினைவுகூறத்தக்கது. இருப்பினும், தடையை மீறி நினைவிடம் சென்று தனது தோழிக்கு சசிகலா மரியாதை செலுத்துவார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

’சசிகலா தமிழகம் வருவதற்கு முன்பே ரசாயன மாற்றம் நிகழ்ந்து வருகிறது’

’ஜெயலலிதா நினைவிடம் செல்வார் என்ற உடன் நினைவிடத்தை மூடியவர்கள், அதிமுக தலைமைக்கழகம் செல்வார் என்றால் அதையும் மூடி விடுவார்களா?’ என்று அமமுகவின் நாளேடான நமது எம்ஜிஆர் கேள்வி எழுப்பியுள்ளது. சசிகலா தமிழகம் வருவதற்கு முன்பே ரசாயன மாற்றம் நிகழ்ந்து வருவதாக டிடிவி தினகரன் தெரிவித்திருந்த நிலையில், கொஞ்சம் பொறுத்திருங்கள், பல வியக்கத்தக்க மாற்றங்கள் நிகழும் என அரசியல் விமர்சகர்களும் ட்விஸ்ட் வைக்கின்றனர்.

அதிமுக தலைமை நிலையம் செல்கிறாரா சசிகலா?
அதிமுக தலைமை நிலையம் செல்கிறாரா சசிகலா?

தற்போது பெங்களூருவின் ஹெப்பல் அருகே உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ள சசிகலாவுடன், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் தொலைபேசி வாயிலாக பேசி வருவதாகவும், சென்னை வரும் அவரை நேரில் சென்று சந்திக்கவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தி.நகரில் உள்ள இளவரசியின் இல்லத்தில் தங்கவுள்ள சசிகலா, குறிப்பிட்ட நாட்கள் ஓய்விற்கு பின், தீவிர அரசியலில் இறங்குவார் எனவும், அதுவரை அவருக்கே உரித்தான திரைமறைவு அரசியல் தொடரும் என்றும் கூறுகின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள். சசிகலாவின் தமிழக வருகைக்குப் பின் அதிமுகவில் இருந்து பலரை நீக்க வேண்டி வரும் என்று கூறுகிறார் பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன்.

’சசிகலா மீது டிஜிபியிடம் அதிமுக புகார்’
’சசிகலா மீது டிஜிபியிடம் அதிமுக புகார்’

இந்நிலையில், இன்று சென்னை டிஜிபி அலுவலகம் சென்ற அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர், சசிகலா தனது காரில் அதிமுக கொடியை பயன்படுத்துவதை எதிர்த்து புகாரளித்து வந்துள்ளனர். இது குறித்து பேசிய சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், சசிகலா காரில் அதிமுக கொடியை பயன்படுத்தியது குறித்து நீதிமன்றத்தில் முறையிடாமல் டிஜிபியிடம் சென்றது ஏன் எனவும், ஏனெனில் அவர்களால் அவ்வாறு புகார் தெரிவிக்க இயலாது என்றும் கூறினார். அதற்கு, இடைக்கால உத்தரவோடு நிலுவையில் இருக்கும் சசிகலா தொடுத்த வழக்கை காரணம் காட்டுகிறார் அவர்.

’தேர்தல் பயணத்தை ஒத்திவைத்துள்ள இபிஎஸ்’
’தேர்தல் பயணத்தை ஒத்திவைத்துள்ள இபிஎஸ்’

சசிகலாவின் நடவடிக்கையை காத்திருந்து பாருங்கள் என்று கூறும் அமமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி, சசிகலா கை காட்டுபவர் தலைமையில்தான் தமிழகத்தில் ஆட்சி அமையும் என்றும் தெரிவித்தார். ஆனால், ‘இவர்தான் இனி முதலமைச்சர்’ என சசிகலா முன்னர் கை காட்டிய எடப்பாடி பழனிசாமியோ, தனது தேர்தல் பயணத் திட்டத்தையே ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு சசிகலாவின் தமிழக பயணத் திட்டம்தான் காரணமா என்பது போகப்போகத் தெரியும்.

இதையும் படிங்க: சசிகலாவை வரவேற்க ஹெலிகாப்டரில் மலர் தூவ அனுமதி கோரி மனு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.