ETV Bharat / city

அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களால் தமிழ்நாட்டிற்கு என்ன பயன் - தயாரிப்பாளர் கே. ராஜன் - சினிமா செய்திகள்

அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களால் தமிழ்நாட்டிற்கு என்ன பயன், படத்தை ஓடிடிக்கு விற்றாலும் ஓடிடியில் வரும் வரிகூட தமிழ்நாட்டிற்கு வருவதில்லை எனத் தயாரிப்பாளர் கே. ராஜன் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் ராஜன்
தயாரிப்பாளர் ராஜன்
author img

By

Published : Dec 17, 2021, 5:10 PM IST

சென்னை: ருத்ரா புதுமுக நாயகனாக நடித்துள்ள சர்க்கரை தூக்கலாய் ஒரு புன்னகை படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (டிசம்பர் 17) நடைபெற்றது.

இதில் படக்குழுவினர், தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநர்கள் பேரரசு, ஆர்.வி. உதயகுமார், பி.டி. செல்வகுமார், ரவிமரியா, சுப்பிரமணிய சிவா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களால் தமிழ்நாட்டிற்கு என்ன பயன்

இதனையடுத்து படக்குழுவினர் பேசுகையில்,

பி.டி. செல்வகுமார்: கதாநாயகிகள் நிச்சயம் இசை வெளியீட்டு விழாவிற்கு வர வேண்டும். படம் ஒப்பந்தம் போடும்போதே கட்டாயம் இதனைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ரவிமரியா: திரைப்படங்களை விமர்சிப்பது நல்லதுதான். ஆனால் அதனைத் திரைத் துறையில் இருப்பவர்களே விமர்சிப்பது தவறானது. சமீபத்தில்தான் நடித்து வெளியான படத்தை திரைத் துறையில் இருப்பவரே விமர்சனம் செய்திருந்தது வருந்தத்தக்கது.

கே. ராஜன்: சிறுமுதலீட்டுப் படங்கள் வெற்றிபெற வேண்டும். அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களால் தமிழ்நாட்டிற்கு என்ன பயன்? படத்தை ஓடிடிக்கு விற்றாலும் ஓடிடியில் வரும் வரிகூட தமிழ்நாட்டிற்கு வருவதில்லை. இயக்குநர்கள்தாம் தயாரிப்பாளரின் பணத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றார்.

இதையும் படிங்க: பள்ளி சுவர் இடிந்து விபத்து: தலைமை ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.