சென்னை: செல்போன் கடையில் கொள்ளையடித்த அடையாளம் தெரியாத நபர்களை சிசிடிவி காட்சிகள் உதவியுடன் காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
மணலி, காமராஜ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணா. இவர், அதே பகுதியில் செல்போன் கடை வைத்து வியாபாரம் செய்துவருகிறார். நேற்றிரவு (ஜூன்.26) கடையை மூடி விட்டு வீட்டிற்குச் சென்றார்.
வழக்கம்போல் இன்று(ஜூன்.27) காலை கடையைத் திறப்பதற்காக வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்றபோது கடையில் இருந்த 2 லட்ச ரூபாய் பணம், 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை போனது தெரியவந்தது.
தகவலறிந்து சம்பவம் இடத்துக்கு வந்த மாதவரம் காவல்துறையினர் கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: ஜூன் 28 முதல் விரைவுப் பேருந்துகள் இயக்கம்