மலேசியாவிலிருந்து நேற்று சென்னை விமான நிலையத்திற்கு பாட்டிக் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத் துறை அலுவலர்கள் சோதனை செய்தனர்.
அப்போது அலுவலர்களிடம் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்த அஸ்மான் கான், மீரான் ஆகியோர் மீது சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, அவர்களது உடமைகளை சோதனையிட்டனர். அதில் அவர்கள் கொண்டுவந்த சமையல் பாத்திரத்தில் சோதனை மேற்கொண்டபோது ரூ.2.25 கோடி மதிப்புள்ள வைரத்தை மறைத்து கொண்டுவந்ததைக் கண்டு சுங்கத் துறை அலுவலர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து வைரத்தை பறிமுதல் செய்த அலுவலர்கள், அவர்கள் இருவர்களிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.