சென்னை வேப்பேரியில் உள்ள ஒய்எம்சிஏ அரங்கில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் தேர்தல் அலுவலர் கவுரவ் கோகாய், மேலிடப்பொறுப்பாளர்கள் தினேஷ் குண்டுராவ், சிரிவெல்லபிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் 1: இந்தியாவில் அசாதாரண அரசியல் சூழல் ஏற்பட்டுள்ளது. மக்களைப் பிளவுபடுத்தி நல்லிணக்கம் சீர்குலைந்து வளர்ச்சி தடைபட்டுள்ளது. இதிலிருந்து இந்திய மக்களை மீட்பதற்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட வேண்டும்.
தீர்மானம் 2: மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களை நியமனம் செய்யும் அதிகாரத்தை அகில இந்தியத் தலைமைக்கு வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, டெல்லிக்கு அனுப்பப்பட்டது.
இதையும் படிங்க: பாரத் ஜோடோ - சிறுமியின் காலணியை சரிசெய்த ராகுல்காந்தி