ETV Bharat / city

தொடர் கொலை மிரட்டல்! - பாதுகாப்பு கேட்கும் பெண் ஊராட்சி மன்றத் தலைவர்! - பட்டியலினத்தைச் சேர்ந்த ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர்

சென்னை: தொடர் மிரட்டல் காரணமாக காவல்துறை பாதுகாப்பு கோரி பட்டியலினத்தைச் சேர்ந்த ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் அமிர்தம் தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

leader
leader
author img

By

Published : Dec 26, 2020, 12:45 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவராக அமிர்தம் என்ற பெண் உள்ளார். பட்டியலினத்தைச் சேர்ந்த இவர் பதவியேற்றது முதல், ஊராட்சி மன்ற செயலாளர் சசிக்குமார் உரிய மரியாதை கொடுக்காத நிலையில், ஆவணங்களையும் முறையாக சமர்ப்பிக்காமல் இருந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் இருந்து வந்தன.

அதேபோல் துணைத்தலைவர் ரேவதியின் கணவர் விஜயகுமார் மற்றும் முன்னாள் தலைவர் ஹரிதாஸ் ஆகியோரின் தொடர் மிரட்டலுக்கும் அமிர்தம் ஆளாகியுள்ளார். இதன் வெளிப்பாடாக சுதந்திர தின கொடியேற்று விழாவில் அமிர்தத்தை தேசியக்கொடி ஏற்றவிடாமல் இந்த மூவரும் தடுத்தனர். இதுதவிர தலைவர் நாற்காலியில் அமர்வதை தடுப்பது, சாதிப்பெயரை குறிப்பிட்டு அழைப்பது, செலவு ஆவணங்களை தராமல் மறைப்பது, துணைத்தலைவரின் கணவர் மூலம் ஆவணங்கள் கையாளப்படுவது போன்ற பல முறைகேடுகளை அமிர்தம் தட்டிக்கேட்டுள்ளார்.

இதையடுத்து தன் மீதான கொடுமைகள் குறித்து காவல் நிலையத்தில் அமிர்தம் அளித்த புகாரில், ஹரிதாஸ், விஜயகுமார், சசிக்குமார் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்பின், மூவரும் நீதிமன்றத்தில் சரணடைந்து, பிணை பெற்றனர்.

இந்நிலையில் தனக்கு மீண்டும் மிரட்டல்கள் வருவதால் காவல்துறை பாதுகாப்பு வழங்கக் கோரி அமிர்தம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், 1997 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை பட்டியலின மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பல ஊராட்சி மன்றத் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதால், தனக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

மனுவை விசாரித்த நீதிபதி ரவீந்திரன், 2 வாரங்களில் விளக்கமளிக்கும்படி, தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: நிலப்பிரச்சினையில் பெண்ணுக்கு மண்டை உடைப்பு: நடவடிக்கை எடுக்க மறுத்த காவல் துறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.