ETV Bharat / city

தலைமைச் செயலகத்தில் மாற்றுதிறனாளிகளுக்கு வசதியாக சாய்வு பாதை அமைக்க கோரிக்கை

சென்னை: தலைமைச் செயலத்துக்கு வரும் மாற்றுதிறனாளிகள் வசதிக்காக சாய்தளப் பாதையை அமைத்திட வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்ந்த முகமது கடக் என்பவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.

naam tamilar party contestant
naam tamilar party contestant
author img

By

Published : Mar 26, 2021, 4:06 PM IST

சென்னை துறைமுகம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக மாற்றுத்திறனாளியான முகமது கடக் என்பவர் வேட்புமனு தாக்கல்செய்திருந்தார். இந்த மனுவானது வேட்புமனு பரீசிலனையின்போது வரவு-செலவு முறையாக இல்லை எனக் கூறி நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், முகமது கடக் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுவை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கூறி தலைமைச் செயலகத்துக்கு வந்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலரிடம் மனு கொடுத்தார்.

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, "துறைமுகம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில்தான் போட்டியிட வேட்புமனு தாக்கல்செய்தேன். வேட்புமனு பரிசீலனையின்போது எனது மனுவை ஏற்றுக்கொள்ளாமல் தேர்தல் அலுவலர் நிராகரித்தார்.

இது குறித்து நான் தேர்தல் அலுவலரிடம் காரணம் கேட்டபோது வரவு செலவுக் கணக்குச் சரியாக இல்லை" எனக் கூறினார்.

சாய்வுப்பாதை அமைக்க கோரிக்கை

இதன் காரணாமாக நான் தற்போது தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலரிடம் என மனுவை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டி வலியுறுத்தி மனு அளித்துள்ளேன். எனது மனு ஏற்காதபட்சத்தில் உயர் நீதிமன்றத்தை நாடி துறைமுகம் தொகுதியில் மட்டும் தேர்தல் நடத்த அனுமதிக்கக் கூடாது என வழக்குப்பதிவு செய்யவுள்ளேன்.

தலைமைச் செயலகத்துக்கு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக சாய்தளப் பாதையை அமைக்க வேண்டும். இங்கு பல மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அலுவலர்களிடம் மனு அளிக்க தினசரி வருகின்றனர்.

அவ்வாறு வரும் அவர்கள் சாய்தளப் பாதையின்றி மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். எனவே மாற்றுத்திறனாளிக்குக்கு வசதியாக சாய்தளப் பாதையை அமைக்க வேண்டும் எனத் தலைமைச் செயலருக்குக் கோரிக்கைவிடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.