ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல், கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் மறு வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட கோரிக்கைகளுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போதே, மறு வாக்கு எண்ணிக்கைக் கோரி மனு அளித்திருந்தால் மட்டுமே அந்த மனு தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.
வாக்கு எண்ணிக்கை முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்டிருந்தால், தேர்தல் வழக்குதான் தொடர முடியும் என்றும், அந்த இடங்களில் மறுவாக்கு எண்ணிக்கைக் கோரி தொடரப்பட்ட வழக்குகளை விசாரிக்க முடியாது என்றும் கூறி, அந்த வழக்குகளை நீதிபதி முடித்து வைத்தார்.
மேலும் சில வழக்குகளில் மாநில தேர்தல் ஆணையம் விளக்கமளிக்கவும் நீதிபதி ஆதிகேசவலு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: மாநிலங்களவை உறுப்பினராவாரா சீதாராம் யெச்சூரி?