தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கு ஏப்ரல். 6ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அன்று வேளச்சேரியில் இரண்டு இருசக்கர வாகனத்தில் மூன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1 விவிபேட் எடுத்துச் சென்றது சர்ச்சையை கிளப்பியது.
இதுகுறித்து, தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலரிடம் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92 இல் மறுவாக்குப்பதிவு நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.
மறு வாக்குப்பதிவு, காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு மையத்தில் 548 ஆண் வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க தகுதி பெற்றவர்களாக உள்ளனர்.
ஏற்கனவே, இடது கை ஆள்காட்டி விரலில் மை வைக்கப்பட்டுள்ளதால், நாளைய வாக்குப்பதிவின்போது நடு விரலில் மை வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'வாக்கு எண்ணிக்கைக்கு தயாராகும் திமுக; ஆலோசனை நடத்தும் தலைமை; பின்னணி என்ன?'