ETV Bharat / city

சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவுக்கு மக்கள் கோலமிட்டு எதிர்ப்பு!

author img

By

Published : Aug 11, 2020, 2:06 PM IST

சென்னை: மத்திய அரசின் சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020க்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் இன்று ’இயற்கையை காக்க வேண்டும், SCRAP EIA 2020' என்று வீடுகளில் கோலமிட்டு மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

eia
eia

நாடு முழுவதும் கடந்த சில நாள்களாக பேசுபொருளாக மாறியிருப்பது, சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020. இதுநாள்வரை தொழிற்சாலைகள், சாலை விரிவாக்கம் உள்ளிட்டவற்றிற்காக நிலம் கையகப்படுத்துதல் போன்றவற்றிற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பிறகே பணியை தொடங்க முடியும்.

அதனால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதையும் உறுதி செய்ய வேண்டும். அவற்றை தொடங்கும் முன் மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டமும் நடத்தப்பட வேண்டும்.

ஆனால், தற்போது மத்திய அரசு புதிதாக தாக்கல் செய்துள்ள சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவின்படி, எந்தவித அனுமதியோ, கருத்துக்கேட்பு கூட்டமோ நடத்தத் தேவையில்லை.

இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. எதிர்க்கட்சிகள், சூழலியல் ஆர்வலர்கள், பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட சூழலியல் அமைப்புகள் என பலரும் இந்த வரைவை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

கிராமப்பகுதிகளிலும் கடும் எதிர்ப்பு
கிராமப்பகுதிகளிலும் கடும் எதிர்ப்பு

இது வெறும் வரைவுதான் என்று கூறியுள்ள மத்திய அரசு, பொது மக்கள் கருத்துகளுக்கு ஏற்ப அதில் மாற்றங்கள் செய்யப்படும் என விளக்கமளித்துள்ளது.

பொதுமக்களிடம் கருத்துகள் பெறுவது நிறைவடைந்துள்ள நிலையில், இன்று தமிழ்நாடு முழுவதும் சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020க்கு எதிராக கோலங்கள் மூலம் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் கோலமிட்டு எதிர்ப்பு
மாநிலம் முழுவதும் கோலமிட்டு எதிர்ப்பு

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள், மாணவர்கள், தங்கள் வீடுகளின் முன்பு ' இயற்கையை காக்க வேண்டும் SCRAP EIA 2020' என்று கோலமிட்டு எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக சென்னை திருவொற்றியூரில் பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவர்கள் இணைந்து கோலங்கள் வரைந்து சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020க்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

மேலும், இது தொடர்பாக திமுக மகளிர் அணிச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், ' புதிய சுற்றுச்சூழல் கொள்கை வரைவு, சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு பதிலாக, தொழில் தொடங்குவதை எளிதாக்குகிறது. மனிதர்கள் நலனை விலையாக கொடுத்து வளர்ச்சி பற்றி பேசுகிறது. நாடு முழுக்க கோலங்கள் மூலம் இக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது “ என்று தெரிவித்துள்ளார்.

சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவுக்கு மக்கள் கோலமிட்டு எதிர்ப்பு

இதையும் படிங்க: விவசாய நிலங்களுக்கு பாதகம் ஏற்படுவதை அரசு அனுமதிக்காது: அமைச்சர் காமராஜ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.