ETV Bharat / city

வேட்புமனு தாக்கல் நிறைவு - மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வாகின்றனர் திமுக, அதிமுக வேட்பாளர்கள்! - மாநிலங்களவை தேர்தல்

சென்னை: மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெற்றது. மொத்தமாக 9 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

admk
admk
author img

By

Published : Mar 13, 2020, 6:36 PM IST

தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஆறாம் தேதி தொடங்கியது. இத்தேர்தலில் திமுகவும், அதிமுகவும் தலா மூன்று இடங்களில் போட்டியிடுகின்றன. அதன்படி திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராசு, என்.ஆர். இளங்கோ ஆகியோரும்,

அதிமுக சார்பில் கே.பி.முனுசாமி, தம்பிதுரை, ஜி.கே.வாசன் (த.மா.கா) ஆகிய மூன்று பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் தவிர சுயேட்சை வேட்பாளர்களாக பத்மராஜன், அக்னி ராமச்சந்திரன், இளங்கோ யாதவ் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலம் இன்றுடன் நிறைவு பெற்றது. மார்ச் 16ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறும். மார்ச் 18 வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளாகும். மார்ச் 26ஆம் தேதி தேர்தல் நடைபெறும். ஆனால், மாநிலங்களவைக்கு தேர்வுபெற 34 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பதால், சுயேட்சை வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு திமுக, அதிமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதற்கே வாய்ப்புகள் இருக்கின்றன.

இதையும் படிங்க: 'அவர் பேசியிருக்கலாம், இனி பயனில்லை' - ஜோதிராதித்ய சிந்தியா குறித்து காங்கிரஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.