ETV Bharat / city

மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் இன்று மீண்டும் ஆலோசனை! - Rajinikanth

சென்னை: ராகவேந்திரா மண்டபத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் இன்று (டிச.10) திடீர் ஆலோசனை நடத்தினார்.

மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் இன்று மீண்டும் ஆலோசனை!

author img

By

Published : Dec 10, 2020, 7:37 PM IST

Updated : Dec 10, 2020, 7:43 PM IST

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் கட்சி தொடங்க உள்ள நிலையில் அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் கட்சியை அமைப்பு ரீதியாக வலுப்படுத்த நிர்வாகிகளை நியமிக்க இன்று தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார்.

ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியை அமைப்பு ரீதியாக வலுப்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக அறியமுடிகிறது. அந்த கூட்டத்தில், வார்டு வாரியாக பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டுமென நடிகர் ரஜினிகாந்த் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனிடையே, நடிகர் ரஜினிகாந்த் இல்லத்திற்கு இன்று நேரில் சென்ற தொழிலதிபர் நல்லி குப்புசாமி, டிசம்பர் 11ஆம் தேதி நடைபெறவிருக்கின்ற வானவில் கலை மையத்தின் நிகழ்ச்சி ஒன்றிற்கான அழைப்பிதழை அளித்தார். வானவில் கலை மையத்தின் சார்பில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதமர் மோடி காணொலி வழியே பங்கேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொள்வார் என்ற தகவல் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் இன்று மீண்டும் ஆலோசனை!
மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் இன்று மீண்டும் ஆலோசனை!

முன்னதாக நேற்று (டிச.9) புதிதாக தொடங்கப்படவிருக்கும் கட்சியின் மேற்பார்வையாளரான தமிழருவி மணியன், தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜூன மூர்த்தி, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகரன் ஆகியோர் சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : தூர்வாரப்படுமா மதுராந்தகம் ஏரி?

Last Updated : Dec 10, 2020, 7:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.