சென்னை: பெங்களூருவில் இருந்து தானாப்பூர் செல்லும் ரயிலில், பிகாரைச் சேர்ந்த 7 வயது சிறுமி தனது பெற்றோருடன் பயணம் செய்துள்ளார். இந்த ரயிலானது நேற்று மாலை 3 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய நடைமேடை 5இல் வந்தது.
அப்போது, சிறுமி கழிவறைக்கு சென்றபோது, அங்கிருந்த நபர் ஒருவர் சிறுமியிடம் ஆபாசமாக நடந்துகொண்டு அத்துமீற முயற்சித்துள்ளார். மேலும், நடந்ததை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இந்த நிலையில் அழுதுகொண்டே வந்த சிறுமியிடம் அவரது பெற்றோர் நடந்ததை கேட்டு அதிர்ச்சியடைந்து, ரயில்வே பாதுகாப்புப் படை காவலர்களிடம் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நபரை காவலர்கள் கைதுசெய்தனர்.
கைது செய்யப்பட்டவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தீபக்(30) என்பதும் இவர் கட்டுமான பணி செய்து வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து சென்ட்ரல் இருப்புப்பாதை காவல் நிலையத்தில் தீபக்கிடம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இளம்பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து பாலியல் வன்புணர்வு; மருத்துவ கல்லூரி மாணவர் கைது