ETV Bharat / city

ரயிலில் தவறவிட்ட கைப்பை: உரியவரிடம் ஒப்படைத்த காவல் துறை! - தவறவிட்ட கைப்பையை உரியவரிடம் ஒப்படைத்த காவல் துறை

சென்னை: ரயிலில் தவறவிட்ட இரண்டரை லட்சம் ரூபாய், நகைகள் அடங்கிய கைப்பையை உரியவரிடம் ரயில்வே பாதுகாப்புப் படை காவலர்கள் ஒப்படைத்தனர்.

police
police
author img

By

Published : Oct 22, 2020, 8:58 PM IST

எழும்பூர் ரயில் நிலையத்திற்கு காலை 05.20 மணியளவில், பொதிகை விரைவு ரயில் வந்துள்ளது. அந்த ரயிலில் உள்ள இருக்கைகளைச் சுத்தம் செய்யும்போது அதற்குக் கீழே கைப்பை ஒன்று கேட்பாரற்று இருந்துள்ளது.

இதையடுத்து உடனடியாக எழும்பூர் ரயில்வே காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, ரயில் பெட்டியில் இருந்த கைப்பை ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனை எடுத்துச் சென்று காவல் துறையினர் ஆராய்ந்தபோது, 2.5 லட்ச ரூபாய் பணம், 45 கிராம் தங்க நகைகள், விசிட்டிங் கார்டு உள்ளிட்ட பொருள்கள் இருந்துள்ளன.

பின்னர் விசிட்டிங் கார்டில் இருந்த செல்போன் எண்ணைத் தொடர்புகொண்டு, எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்திற்கு வரவழைத்துள்ளனர். அங்கு வந்த அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் தாம்பரம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பது தெரியவந்தது. இவர் பொதிகை விரைவு ரயிலில் தாம்பரத்தில் இறங்கும்போது கைப்பையைத் தவறவிட்டது தெரியவந்தது.

ரயிலில் தவறவிட்ட கைப்பை - உரியவரிடம் ஒப்படைத்த காவல்துறை!

இதையடுத்து தவறவிட்ட கைப்பையைப் பாதுகாப்பாக சரவணனிடம் ரயில்வே காவல் துறையினர் ஒப்படைத்தனர். காணாமல்போன நகை, பணம் அடங்கிய கைப்பையை மீட்டுக் கொடுத்த ரயில்வே பாதுகாப்புப் படை காவல் துறையினருக்கு சரவணன் நன்றியைத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: குட்கா பான்மசாலா பறிமுதல்: ஒருவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.