ETV Bharat / city

குடியரசுத்தலைவர் தேர்தல்;தமிழ்நாட்டில் 234 எம்.எல்.ஏக்கள்; 3 எம்.பி.க்கள் வாக்களிப்பு - ஓபிஎஸ் எப்படி வந்தார் தெரியுமா? - 3 எம்பி

இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து 234 சட்டப்பேரவை உறுப்பினர்களும், 3 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களுடைய வாக்குகளைப் பதிவு செய்தனர். மேலும் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பால்வளத்துறை அமைச்சர் நாசர், எதிர்க்கட்சித்துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கரோனா பாதுகாப்பு உடை அணிந்து வந்து தங்களின் வாக்கினை பதிவு செய்தனர்.

குடியரசு தலைவர் தேர்தல்; 234 சட்டமன்ற உறுப்பினர்கள், 3 எம்பிகள் வாக்களிப்பு

author img

By

Published : Jul 18, 2022, 8:38 PM IST

சென்னை: குடியரசுத்தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், அவரை எதிர்த்து, எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர். குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாடு தலைமைச்செயலக வளாகத்தில் அமைந்துள்ள "குழுக் கூட்ட அறையில்" காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.

இந்தத் தேர்தலை சட்டப்பேரவைச் செயலாளர் கி. சீனிவாசன், சட்டமன்றப்பேரவைச் செயலக இணைச்செயலாளர் சாந்தி ஆகியோர், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் உதவி தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டு இருந்தனர். தமிழ்நாட்டில் குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்த புவனேஷ்வர் குமார் , தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு ஆகியோர் கண்காணித்தனர்.

பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட திரவுபதி முர்முவுக்கு வாக்குச் சாவடி முகவராக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசனும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த சின்ஹாவிற்கு அரசு கொறாடா கோவி. செழியன், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி ஆகியோரும் முகவர்களாக இருந்து செயல்பட்டனர்.

இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 10 மணிக்கு வந்து தனது வாக்கைப் பதிவு செய்தார். கரோனாவில் இருந்து நேற்று மீண்ட அவர் காவேரி மருத்துவமனையில் இருந்து நேரடியாக தலைமைச் செயலகம் வந்து வாக்களித்தார். அதைத்தொடர்ந்து அமைச்சர்கள், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் தோழமைக் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளை காலை 11.30 வரையில் தொடர்ந்து பதிவு செய்தனர்.

அதன்பின்னர் அதிமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 12 மணி 30 நிமிடம் முதல் தங்கள் வாக்குகளை 1 மணி வரையில் பதிவு செய்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஈரோடு கணேஷ் மூர்த்தி, நாகப்பட்டினம் செல்வராஜ், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். சுமார் மதியம் 4 மணிக்கு சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

அதன் பின்னர் வாக்குப்பதிவிற்கு நியமிக்கப்பட்ட அலுவலர்கள் சட்டப்பேரவைச்செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட அலுவலர்களும், வாக்குச்சாவடி முகவர்களாக செயல்பட்டு வந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் வானதி சீனிவாசன், கு.பிச்சாண்டி ஆகியோரும் கரோனா பாதுகாப்பு முழுக் கவசம் அணிந்து வந்தனர். அதனைத்தொடரந்து 108 ஆம்புலன்ஸில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் வருகை தந்து தனது வாக்கை பிபிஇ கிட் அணிந்து தனது வாக்கை 4.15 மணிக்கு பதிவு செய்தார்.

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் நண்பகல் 2 மணி அளவில் மருத்துவமனையில் இருந்து வாக்களிக்க வந்தார். ஆனால், நேப்பியர் பாலம் அருகே திரும்பிச்சென்று மீண்டும் மாலை 4.30 மணிக்கு பிபிஇ கிட் அணிந்து வந்து வாக்களித்தார். குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 5 மணியோடு முடிவுற்றது. வாக்குப்பெட்டிகள் சீல் இடப்பட்டு பலத்த பாதுகாப்போடு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

குடியரசுத்தலைவர் தேர்தல்;தமிழ்நாட்டில் 234 எம்.எல்.ஏக்கள்; 3 எம்.பி.க்கள் வாக்களிப்பு - ஓபிஎஸ் எப்படி வந்தார் தெரியுமா?

இதையும் படிங்க: அச்சிடப்பட்ட பேப்பரில் வடை; கேன்சருக்கு வழிவகுப்பதால் தடை:தூத்துக்குடி ஆட்சியர் அதிரடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.