தமிழ்நாட்டில் தேவேந்திர குலத்தான், குடும்பன், பள்ளன், கடையன், காலாடி, பண்ணாடி, வாதிரி ஆகிய உள்பிரிவுகளில் இருக்கும் மக்கள் தங்களை, 'தேவேந்திர குல வேளாளர்' என, ஒரே பெயரில் அழைக்க வலியுறுத்திவந்தனர். இக்கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு, அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருந்தது.
இந்நிலையில் பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தமிழ்நாடு வந்தபோது, இது தொடர்பாக வாக்குறுதி அளித்திருந்தனர். அதன்படி, இதற்கான சட்டத்திருத்த மசோதாவை, மக்களவையில் தாக்கல்செய்து மத்திய அரசு நிறைவேற்றியது.
அதனைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், குடியரசுத் தலைவர் இந்தச் சட்டத்திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம் மசோதா சட்டமாகியுள்ளது.
இதையும் படிங்க: தேவேந்திர குல வேளாளர் மசோதாவிற்கு மக்களவை ஒப்புதல்: தேர்தலில் தாக்கம் எப்படி இருக்கும்?