இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையில் 17.08.2020 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக சில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்புப் பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் மீண்டும் கொடுக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடைபடும் இடங்கள்
அடையார் பகுதி :
வெங்கடேஸ்வரா நகர் (ஒன்று முதல் ஐந்தாவது தெரு), ஜீவரத்தினம் நகர் (ஒன்றாவது, இரண்டாவது தெரு, கற்பகம் கார்டன் (ஒன்றாவது முதல் ஏழாவது குறுக்குத் தெரு), ஒன்றாவது மெயின் ரோடு, கற்பகம் கார்டன்.
பெசன்ட் நகர் பகுதி :
பீச் ஹோம் அவென்யு, தமோதரபுரம், பென்கோ காலனி, கஸ்டம்ஸ் காலனி, பழைய சி.பி.டபில்யு.டி.குடியிருப்பு, நான்காவது அவென்யூ.
ஈஞ்சம்பாக்கம் பகுதி :
திருவள்ளுவர் சாலை, பெத்தேல் நகர் வடக்கு அனைத்துத் தெரு, பெத்தேல் நகர் தெற்கு அனைத்துத் தெரு, சோழமண்டல தேவி நகர் அனைத்துத் தெரு, கக்கன் தெரு, திருவள்ளுவர் சாலை அண்ணா வளைவு இணைப்பு சாலை, பல்லவன் நகர் பகுதி ஒன்று மற்றும் இரண்டு.
பாலாவாக்கம் பகுதி:
அம்பேத்க்கார் நகர் (கெனால்புரம்), கோவிந்தன் நகர் ஒன்றாவது தெரு முதல் ஏழாவது தெரு வரை, மணியம்மை தெரு (கெனால்புரம்) மற்றும் எம்.ஜி.ஆர் நகர் ஒன்றாவது தெரு முதல் மூன்றாவது தெரு வரை, கோலவிழியம்மன் நகர் ஒன்று முதல் 15ஆவது தெரு வரை, பெரியார்சாலை முழுவதும் மற்றும் காந்தி நகர் ஒன்றாவது தெரு முதல் நான்காவது தெரு வரை, கிருஷ்ணாநகர் ஒன்றாவது தெரு முதல் எட்டாவது தெரு வரை முழுவதும், கந்தசாமி நகர் எட்டாவது தெரு முதல் 10வது தெரு வரை, பச்சையப்பர் ஒன்றாவது தெரு முதல் 11ஆவது தெரு வரை.
வேளச்சேரி மேற்குப் பகுதி :
விஜய நகர், ராம் நகர், காந்தி நகர், ரெட்டை பிள்ளையார் கோயில் தெரு, பழனியப்பா தெரு.
வேளச்சேரி கிழக்கு பகுதி :
தந்தை பெரியார் நகர், 100 அடி தரமணி லிங்க் ரோடு ஒரு பகுதி, உதயம் நகர், அமிர்தம் அவென்யூ, பரணி தெரு, பவாணியம்மன் கோயில் தெரு, கல்லுகுட்டை, பாரதி நகர்.
இதையும் படிங்க: ’பஹ்ரைனுக்கு விமானம் இயக்க ஏற்பாடு’ - வைகோவிடம் உறுதியளித்த அமைச்சர்