ETV Bharat / city

பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்

சென்னை: ஈரான்-அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்துவரும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என வல்லுநர்கள் முன்னறிவிக்கின்றனர்.

petrol prices may go up: Experts  பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்  ஈரான் அமெரிக்கா மோதல்  பெட்ரோல், டீசல் விலையேற்றம்  Iran-US conflict  Petrol and diesel prices rise
Petrol and diesel prices rise
author img

By

Published : Jan 5, 2020, 8:00 AM IST

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான பிரச்னையால் சர்வதேச பங்குச்சந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை ஈரானிய ராணுவத் தளபதியை அமெரிக்க படை வான்வழி தாக்குதல் நடத்தி கொன்றது.

இதற்குத் தக்க பதிலடி கொடுப்போம் என ஈரான் தெரிவித்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. இது சர்வதேச நிதிச் சந்தைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க- சீன வர்த்தகப்போரில் சமரசம் ஏற்பட்டுவருவதால் கடந்த சில நாள்களாக அமெரிக்க பங்குச்சந்தைகள் உச்சத்தில் இருந்தன. இதேபோல், பொருளாதார மந்தநிலைக்கு மத்தியிலும் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் காணப்பட்டன.

இந்தத் தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்துள்ளன. வெள்ளிக்கிழமை வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 162 புள்ளிகள் சரிவை சந்தித்து 41 ஆயிரத்து 464 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நிறைவுசெய்தது.

நிஃப்டி 55 புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இப்பிரச்னையால் இந்தியப் பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்பு, பங்குச்சந்தையின் போக்கு ஆகியவை குறித்து பங்குச்சந்தை நிபுணர் அருள் ராஜன் கூறுகையில், "பங்குச் சந்தைகள் தற்போது புதிய உச்சத்தில் உள்ளன, இந்த நிலை நீடிக்க நேர்மறையான செய்திகள் வர வேண்டும்.

உள்நாட்டு அளவிலும் சர்வசேத அளவிலும் நேர்மறையான முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய செய்திகள் வர வேண்டும். நாட்டின் பொருளாதாரம் மந்த கதியில் இருந்தாலும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து சந்தைகளை உற்சாகப்படுத்தும் வகையில் அரசின் கொள்கை முடிவுகளை அறிவித்துவருகிறார்.

இதனால் அந்நிய முதலீட்டாளர்களும் இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்துவருகின்றனர். தற்போது பொருளாதாரம் சீராக இல்லையென்றாலும் எதிர்காலத்தில் நிலைமாறும் என்ற அடிப்படையில் சந்தை ஏற்றம் கண்டுவருகிறது.

அமெரிக்க பொருளாதாரம் சிறப்பான வகையில் செயலாற்றிவந்ததும் உலகளவில் நல்ல செய்தியாகப் பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் ஈரான் தளபதி மீதான தாக்குதல் சம்பவம் குறித்த செய்தி பங்குச்சந்தைகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

petrol prices may go up: Experts  பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்  ஈரான் அமெரிக்கா மோதல்  பெட்ரோல், டீசல் விலையேற்றம்  Iran-US conflict  Petrol and diesel prices rise
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்
ஈரான் பதில் தாக்குதல் நடத்தினால் சந்தை தற்காலிகமாக வீழ்ச்சி அடையும். இதுபோன்ற நேரங்களில் முதலீட்டாளர்கள் தங்கம், அமெரிக்க டாலர் ஆகியவற்றில் அதிகளவில் முதலீடு செய்வர். கடந்த ஆண்டில் மட்டும் தங்கத்தின் மதிப்பு 25 சதவிகிதம்வரை உயர்ந்துள்ளது. தற்போது வெள்ளிக்கிழமையும் மீண்டும் தங்கத்தில் முதலீடுகள் அதிகரித்துள்ளன.

இந்த விவகாரத்தில் ஈரான் எதிர் தாக்குதல் நடத்தவில்லை என்றால் இந்தப் பிரச்னை சரியாகும். ஒருவேளை ஈரான் பதில் தாக்குதல் நடத்தினால், தங்கத்தின் விலை அதிகரிக்கும், கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கும்.

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு நாம் வாங்கும் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை மூன்று சதவிகிதம்வரை அதிகரித்துள்ளது. இந்தப் பிரச்னை தொடர்ந்தால் நாம் இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்க்கு அதிக விலை கொடுக்க நேரிடும்.

இதனால் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும். டீசல் விலை உயர்வால் போக்குவரத்து செலவுகள் அதிகரித்து நாட்டில் பணவீக்கம் அதிகரிக்கும். பெட்ரோல், டீசல் விலையேறும் அளவுக்கேற்ப நாட்டில் விலைவாசி அதிகரிக்கும்.

பெட்ரோலிய பொருள்களை நம்பியிருக்கும் பெயிண்ட் போன்ற பொருள்களின் விலை அதிகரிக்கும். இதனால் ஏற்கனவே பாதிப்பைச் சந்தித்துவரும் இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் பின்னடைவு ஏற்படும்.

நாட்டில் வேலையிழப்புகள் அதிகரிக்கும். தற்போதைய சூழலில் இந்த விவகாரம் தணிந்தால் இந்தியாவுக்கு நல்லது" என்றார்.

இதையும் படிங்க: இந்தியாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு காரணம் சுலைமானி - ட்ரம்ப்

Intro:Body:

பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்

சென்னை:

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையையான பிரச்னையால் சர்வதேச பங்குச் சந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை ஈரானிய ராணுவ தளபதியை அமெரிக்க படைகள் வான்வழி தாக்குதல் நடத்தி கொண்றனர். இதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என ஈரான் தெரிவித்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையை பதற்றமான சூழல் நிலவுகிறது. இது சர்வதேச நிதி சந்தைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க- சீன வர்த்த போரில் சமரசம் ஏற்பட்டு வருவதால் கடந்த சில நாட்களாக அமெரிக்க பங்குச் சந்தைகள் உச்சத்தில் இருந்தன. இதேபோல், பொருளாதார மந்த நிலைக்கு மத்தியிலும் இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றுத்துடன் காணப்பட்டன. இந்த தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு இந்திய பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்துள்ளன. வெள்ளிக்கிழமை வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 162 புள்ளிகள் சரிவை சந்தித்து 41 ஆயிரத்து 464 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. நிஃப்டி, 55 புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இந்த பிரச்னையால் இந்திய பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் பங்குச் சந்தையின் போக்கு ஆகியவை குறித்து பங்குச் சந்தை நிபுணர் அருள் ராஜன் கூறுகையில், "பங்குச் சந்தைகள் தற்போது புதிய உச்சத்தில் உள்ளன, இந்த நிலை நீடிக்க நேர்மறையான செய்திகள் வர வேண்டும். உள் நாட்டு அளவிலும், சர்வசேத அளவிலும் நேர்மறையான, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய செய்திகள் வர வேண்டும். நாட்டின் பொருளாதாரம் மந்த கதியில் இருந்தாலும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து சந்தைகளை உற்சாகப்படுத்தும் வகையில் அரசின் கொள்கை முடிவுகளை அறிவித்து வருகிறார். இதனால் அந்நிய முதலீட்டாளர்களும் இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்து வருகின்றனர். தற்போது பொருளாதாரம் சீராக இல்லையென்றாலும் எதிர்காலத்தில் நிலை மாறும் என்ற அடிப்படையில் சந்தை ஏற்றம் கண்டு வருகிறது. அமெரிக்க பொருளாதாரம் சிறப்பான வகையில் செயலற்றி வந்ததும் உலக அளவில் நல்ல செய்தியாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் ஈரான் தளபதி மீதான தாக்குதல் சம்பவம் குறித்த செய்தி பங்குச் சந்தைகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் பதில் தாக்குதல் நடத்தினால் சந்தை தற்காலிகமாக வீழ்ச்சி அடையும். இதுபோன்ற நேரங்களில் முதலீட்டாளர்கள் தங்கம், அமெரிக்க டாலர் ஆகியவற்றில் அதிக அளவில் முதலீடு செய்வர். கடந்த ஆண்டில் மட்டும் தங்கத்தின் மதிப்பு 25 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. தற்போது வெள்ளிக்கிழமையும் மீண்டும் தங்கத்தில் முதலீடுகள் அதிகரித்துள்ளது. இந்த விவகாரத்தில் ஈரான் எதிர் தாக்குதல் நடத்தவில்லை என்றால் இந்தப் பிரச்னை சரியாகும். ஒருவேளை ஈரான் பதில் தாக்குதல் நடத்தினால், தங்கத்தின் விலை அதிகரிக்கும், கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கும். இந்த தாக்குதலுக்குகப் பிறகு நாம் வாங்கும் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 3 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. இந்தப் பிரச்னை தொடர்ந்தால் நாம் இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெக்கு அதிக விலை கொடுக்க நேரிடும். இதனால் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும். டீசல் விலை உயர்வால் போக்குவரத்து செலவுகள் அதிகரித்து நாட்டில் பண வீக்கம் அதிகரிக்கும். பெட்ரோல், டீசல் விலை ஏறும் அளவுக்கு ஏற்ப நாட்டில் விலைவாசி அதிகரிக்கும்.

பெட்ரோலிய பொருட்களை நம்பியிருக்கும் பெயின்ட் போன்ற பொருட்களின் விலை அதிகரிக்கும். இதனால் ஏற்கெனவே பாதிப்பை சந்தித்து வரும் இந்திய பொருளாதாரத்துக்கு மேலும் பின்னடைவு ஏற்படும். நாட்டில் வேலையிழப்புகள் அதிகரிக்கும். தற்போதைய சூழலில் இந்த விவகாரம் தனிந்தால் இந்தியாவுக்கு நல்லது" என்றார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.