ETV Bharat / city

தேனாம்பேட்டை மெட்ரோவுக்கு கருணாநிதி பெயர் சூட்டக்கோரி மனு தாக்கல் - மெட்ரோ ரயில்

சென்னை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயரை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். மெட்ரோ தொடர்வண்டி நிலையத்திற்கு வைக்க அரசுக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

metro
metro
author img

By

Published : Sep 11, 2020, 12:12 PM IST

கலைஞர் தமிழ் பேரவையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்துள்ள மனுவில், ”தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி 3 முக்கிய மெட்ரோ தொடர்வண்டி நிலையங்களுக்கு முன்னாள் முதலமைச்சர்களின் பெயர்களைச் சூட்டினார்.

அதன்படி, ஆலந்தூர், சென்ட்ரல், கோயம்பேடு மெட்ரோ தொடர்வண்டி நிலையங்களுக்கு முறையே, மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, எம்.ஜி. ராமச்சந்திரன், ஜெயலலிதா எனப் பெயர்கள் சூட்டப்பட்டன.

சென்னையின் மெட்ரோ தொடர்வண்டி சேவைக்கான திட்டத்திற்கு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில், 2015ஆம் ஆண்டு மத்திய அரசிடன் அனுமதியுடன் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில், இத்திட்டத்திற்கு காரணமாக இருந்த கருணாநிதியின் முயற்சியை வரலாற்றிலிருந்து மறைக்கவும், அரசியல் நோக்கத்துடனும் மற்றத் தலைவர்களின் பெயர்கள் மெட்ரோ தொடர்வண்டி நிலையங்களுக்கு வைக்கப்பட்டுள்ளன.

எனவே, தேனாம்பேட்டை டி.எம்.எஸ். மெட்ரோ நிலையத்திற்கு ’டாக்டர். கலைஞர் கருணாநிதி டி.எம்.எஸ் மெட்ரோ தொடர்வண்டி நிலையம்’ என்ற பெயரை வைக்க வேண்டும் என்று வழங்கப்பட்ட மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'மக்களால் நான் மக்களுக்காகவே நான்' - மாநகரப் பேருந்துகளில் ஜெ., வாசகம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.