சென்னை: வேளச்சேரியை சேர்ந்தவர் இளஞ்செழியன்(54), இவர் கட்டிட ஒப்பந்ததாரராக பணிபுரிந்து வரும் இவரிடம் சோதனை செய்வதாக கூறி ரூபாய் 2.50 லட்சத்தை மர்ம நபர்கள் எடுத்து சென்றுள்ளனர்.
இளஞ்செழியன், கட்டுமான பொருட்கள் வாங்குவதற்காக மாநகர பேருந்தில் திருவான்மியூர் வந்திறங்கி, திருவள்ளுவர் சாலையில் கடை ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு வந்த மர்ம நபர் நபர்கள் இருவர் தங்களை போலீஸ் என கூறி இளஞ்செழியன் கையில் இருந்த பணப் பையை சோதனை செய்துள்ளனர்.
பின்னர் இளஞ்செழியன் பொருட்கள் வாங்க வைத்திருந்த 2.50 லட்சம் பணத்தை பார்த்து விட்டு, காவல்துறை உயர் அலுவலர்களிடம் பணத்தை காண்பித்து விட்டு தருவதாக கூறி எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
நீண்ட நேரம் ஆகியும் மர்ம நபர்கள் திரும்ப வராததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளஞ்செழியன் இது குறித்து திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னை விமான நிலைய கழிவறையில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்