ETV Bharat / city

தீபாவளியில் இறைச்சி கடைகளுக்கு அனுமதி! - மகாவீரர் ஜெயந்தி

தீபாவளியில் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள இறைச்சி கடைகள் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இறைச்சி கடைகள் திறப்பு
இறைச்சி கடைகள் திறப்பு
author img

By

Published : Oct 30, 2021, 11:01 PM IST

சென்னை: தீபாவளி தினத்தன்று இறைச்சி கடைகளை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ளது. இது குறித்த அறிவிப்பாணையில், "இந்தாண்டு நவ.4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அந்த நாள் மகாவீரர் நினைவு தினமாக உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மகாவீரர் நினைவு தினத்தன்று இறைச்சிக் கடைகள் மூடப்படும் நடைமுறை தமிழ்நாட்டில் உள்ள சூழலில், பொதுமக்களின் உணர்வுகளை கருத்திற்கொண்டும் பல்வேறு அமைப்புகளிடமிருந்து வந்த கோரிக்கைகளைப் பரிசீலித்தும் தீபாவளி நாளன்று தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இறைச்சி கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

அதேவேளையில் ஜெயின் மதத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளிலுள்ள இறைச்சிக் கடைகளும், ஜெயின் மத வழிபாட்டு தலங்களைச் சுற்றியுள்ள உள்ள இறைச்சிக் கடைகளை மூடவும் உத்தரவிடப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பேரியம் கலந்த பட்டாசுகள் வெடிக்க தடை - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.